பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bootup disk

175

Borland


மையை நாடாவில், பொதுவாக பேழையில் சேமிப்பார்கள். நாடா இயக்க முறைமையைப் பயன்படுத்தும் கணினியை இயக்கும் நாடா அடங்கியுள்ள, நாடா இயக்ககம் இல்லாமல் பயன்படுத்த முடியாது.

bootup disk : இயக்கும் வட்டு.

boot virus : இயக்க நச்சு நிரல் : ஃபிளாப்பி எனும் வட்டில் இயக்குப் பகுதியில் எழுதப்பட்ட நச்சுநிரல். அத்தகைய நெகிழ்வட்டை ஏற்றும்போது அது கணினி அமைப்பில் தொற்றிக் கொள்கிறது. சான்றாக, மைக்கேல் ஏஞ்சலோ வைரசானது அது பிடித்துள்ள வட்டை ஏற்றினால் மைக்கேல் ஏஞ்சலோ பிறந்தநாளான மார்ச் 6ஆம் நாள் அன்று அது ஏற்றப்பட்ட கணினியில் உள்ள தரவுகளை அழித்துவிடும்.

BOP : பிஓபீ : பிட் சார்ந்த நெறிமுறை என்று பொருள்படும் Bit-Oriented Protocol என்பதன் குறும்பெயர்.

border : எல்லை : திரையின் மீது இயங்கும் சாளரத்தில், பயனாளரின் பணியிடத்தைச் சுற்றியுள்ள விளிம்பு. ஒரு ஆவணம் அல்லது வரைகலையைச் சுற்றி தெரியக்கூடிய எல்லைக்கோடு, அச்சில், ஒரு பக்கம் அல்லது ஒவியத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட விளிம்புகளில் காணப்படும் கோடு அல்லது அமைப்பு.

Border Gateway protocol : எல்லை நுழைவி நெறிமுறை : இன்றைய இணையத்தின் முன்னோடியாக விளங்கிய என்எஸ்எஃப். நெட் பிணையத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்ற நெறிமுறை. புறநுழைவி நெறிமுறை (External Gateway Protocol) யின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சுருக்கச்சொல் பிஜிபீ (BGP) ஆகும்.

border layout : கரை உருவரை.

border properties : கரைப் பண்புகள்.

bore : போர் : ஒரு நெகிழ்வட்டு அல்லது காந்த நாடா சுருணை போன்றவற்றின் துளையின் குறுக்களவு.

Borland C++ : போர்லேண்ட் சி++ : டாஸ் மற்றும் விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லாண்ட் நிறுவனம் உருவாக்கிய அன்சி சி மற்றும் சி++ தொகுப்பு மொழி மென்பொருள். சி-யில் எழுதப்பட்ட விண்டோஸ் நிரல்கள் மற்றும் டர்போசி-யை ஏற்பதுடன் பிழை நீக்கவும் செய்யும்.

Borland (Borland int'l) போர்லாண்ட் : 1983இல்