பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

box class

178

brain dump


முறைமைக்காக முதன் முதலாக உருவாக்கப்பட்ட செயல்தளம் அல்லது நிரல் மாற்றி எனலாம். ஏடீ&டீ சிஸ்டம்-V யூனிக்ஸின் இடம் பெற்றது. 1979ஆம் ஆண்டில் ஏடீ&டீ பெல் ஆய்வுக் கூடத்தில் ஸ்டீவ் போர்ன் (steve bourne) இதனை உருவாக்கினார். ஏனைய யூனிக்ஸ் செயல்தளங்களில் இருக்கின்ற சில வசதிகள் (கட்டளை வரியில் ஒரு கோப்பினைத் திருத்தியமைப்பது, முந்தைய கட்டளைகளைத் திரும்ப வரவழைப்பது) இல்லாத போதும், செயல்தள நிரல்கள் பெரும்பாலானவை போர்ன் செயல்தளத்தில் இயங்குபவையாகவே உள்ளன.

box class : பெட்டி இனக்குழு.

box, decision : தீர்வுப் பெட்டி.

box drawing characters : பெட்டி வரையும் குறிகள் : நீட்டிக்கப்பட்ட ஆஸ்கியில் உள்ள பெட்டிகளை வரையப் பயன்படுத்தப்படும் குறிகளின் தொகுதி.

box layout : பெட்டி உருவரை.

bozo : போஸோ : இணையத்தில் குறிப்பாக செய்திக் குழுக்களில் முட்டாள்தனமான, பிறழ்மனப்போக்கு உடையவர்களைக் குறிக்கப் பயன்படும் கொச்சைச் சொல்; பேச்சு வழக்குச் சொல்.

bozo filter : போஸோ வடி கட்டி : இணையப் பயனாளரின் கணினியில் மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுவுக்கான மென்பொருள் தொகுப்பில் இருக்கும் வசதி. இதன்மூலம் ஒருவர் தனக்கு, குறிப்பிட்ட சிலரிடமிருந்து வரும் மின்னஞ்சல்களையும், செய்திக்குழுக் கட்டுரை வடிகட்டிப் புறக்கணித்து விடலாம். பெரும்பாலும், போஸோக்களிடமிருந்து வரும் தகவல்களைத்தான் இவ்வாறு தடுப்பர்.

BPI : பிபிஐ : ஓர் அங்குலத்தில் இத்தனை பிட்டுகள் எனப்பொருள்படும் bit per inch என்பதன் சுருக்கம். bytes per inch என்பதற்கு BPI என்று குறும்பெயர் தரப்படுகிறது.

bps : பிபீஎஸ் : ஓர் வினாடியில் இத்தனை பிட்டுகள் எனப்பொருள்படும் bits per second மற்றும் bytes per second என்பதன் குறும்பெயர், bps என்பதாகும்.

bracket : அடைப்புக்குறி.

brain-damaged : மூளை பாதிக்கப்பட்ட : மோசமாக நடக்கும் அல்லது அழிக்கும் முறையில் செயல்படும் நிரலைக் குறிப்பிடும் சொல்.

brain dump : குப்பைத் தகவல் : மின்னஞ்சல் அல்லது