பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

breadth-first search

180

breakpoint



breadth-first search : அகல - முதல் தேடல் : மரவடிவ தரவு அமைப்பை அலகம் ஒரு முறை. இம்முறையில் ஒரு நிலையில் உள்ள எல்லா முனைகளையும் தேடிய பின் அடுத்த நிலையில் தேடுவது. இதன் மூலம் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான கருக்கமான பாதையை முதலில் கண்டு பிடிக்க முடியும்.

Break : முறி; நிறுத்து : ஒரு நிரலாக்கத்தொடர் செயல்படுவதைத் தடுப்பதற்கான ஆணை. Control Break என்பதற்கு ஒப்புமை உடையதல்ல.

break code : முறிவு குறி முறை : விசையினை முதல் முதலில் அழுத்தும்போது வெளியிடப்படும் ஸ்கேன் குறியீடு.

break, control : கட்டுப்பாட்டு முறிப்பு : கணினியில் ஒரு நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது Ctrl, Break ஆகிய இருவிசைகளையும் அழுத்தி நிரலின் ஒட்டத்தை நிறுத்தலாம்.

break down : நிலைகுலைவு.

break detect : முறிவு அறிதல் : நீள் வரிசை அளவை 0-க்களை கண்டுபிடிக்கும், தகவல் தொடர் தகவியின் திறன்.

break key : முறிவு விசை : கணினி செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்துவதற்கான விசை. சில கணினிகளில் காணப்படும்.

break mode : முறிவு பாங்கு.

breakout box : அவசர உதவிப் பெட்டி : கணினியில் இரண்டு சாதனங்களுக்கு (கணினியும் இணக்கியும்) இடையில் ஒரு வடம் மூலம் இணைக்கப்படும் ஒரு வன்பொருள் சாதனம். தேவையெனில், வடத்தின் தனித்த கம்பிகளின் வழியாகவும் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அவசர உதவிப் பெட்டி

breakpoint : முறிவிடம் : ஒரு கட்டுப்பாட்டு ஆணை மூலமாகவோ அல்லது கையால் இயக்குவது மூலமாகவோ ஒரு நிரலை நிறுத்தக்கூடிய ஒரு இடம். சோதனை