பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

browse

184

BSC


புரவுன்அவுட் ஏற்படுகிறது. மின்சக்தியின் தேவை, அதன் உற்பத்தியை விட 50 ஹெர்ட்ஸ் அதிகரிக்கும்போது இந்நிலை ஏற்படுகிறது. இதனால் யின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

browse : உலாவு : தேடு : 1. டி பேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற தரவுத் தளத் தொகுப்புகளில், ஒரே திரையில் ஒட்டு மொத்தமாக பல ஏடுகளைத் திரையிட்டு தகவலைத் தேடவும் திருத்தவும் பயன்படும் கட்டளை. 2. இணையத்தில் மேலோட்டமாக தகவல் பக்கங்களைப் பார்வை யிடுவதைக் குறிக்கும் சொல்.

browse button : உலாவு பொத்தான்.

browse mode : உலாவுப் பாங்கு.

browse option : உலாவுத் தேர்வு.

browse stylesheets : உலாவி பாணித் தாள்கள்.

browser : உலாவி : நிரலாக்க மொழி அளிக்கின்ற கருவி வரிசை முறையைப் பார்த்து, குறி முறையைத் திருத்த நிரலருக்கு உதவும் மென் பொருள்.

browsers/web browser : உலாவி/வலை உலாவி : வலையில் ஆவணங்களைத் தேடிப் பெறவும், ஆவணத்திலிருந்து ஆவணத்திற்கு இணைப்புப் பின் தொடரவும் அனுமதிக்கும் மென்பொருள் இணையத்தில் பயன் படுவது.

browse view : உலாவுத் தோற்றம்.

browsing : உலாவுதல்;நோட்டமிடல் : கணினி பட்டியல்களிலோ அல்லது கோப்புகளிலோ சுவையான செய்தி கிடைக்காதா என்று தேடுதல்.

brush : துரிகை : கணினி வரை படங்களில் ஜாய் ஸ்டிக், பேடில் அல்லது அதை போன்ற உள்ளீட்டுச் சாதனங்களின் மூலம் காட்சித் திரையின் எந்தப் பகுதியிலும் நகர்த்தக் கூடிய வண்ணம் தரும் சாதனம்.

brute-force technique : முரட்டுவிசை நுட்பம்.

. bs : . பிஎஸ் : ஒர் இணைய தளம் பஹாமஸ் நாட்டில் உள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர் தளமுகவரியின் இறுதியில் இடம்பெறும்.

BSAM (Bee Sam) : பி. சாம் : அடிப்படைத் தொடர் வரிசை அணுகுமுறை என்று பொருள் படும் Basic Sequential Access Method என்பதன் குறும்பெயர்.

BSC : பிஎஸ்சி : இரும ஒத் திசைவு தகவல் தொடர்பு என்று