பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

BSD UNIX

185

B-tree


பொருள்படும் Binary Synchronous Communication என்பதன் குறும்பெயர். தரவு அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு செயல்முறை.

BSD UNIX : பிஎஸ்டி யூனிக்ஸ் : யூனிக்ஸ் இயக்க முறைமை ஏடி&டி பெல் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட போதிலும், உலகின் பல்வேறு நிறுவனங்களும் பல்கலைக் கழக ஆய்வுக் கூடங்களும் யூனிக்ஸ் முறைமையை பல்வேறு வடிவங்களில் மேம்படுத்தி உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் பெர்க்கிலி சாஃப்ட்வேர் டிஸ்ட்ரிபியூஷன் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட யூனிக்ஸ் பதிப்பு ஆகும். இதுவே சுருக்கமாக பிஎஸ்டி யூனிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. இன்று யூனிக்ஸில் இருக்கின்ற பிணையத் திறன், கூடுதல் புறச்சாதன ஏற்பு, நீண்ட கோப்புப் பெயர், சி-செயல் தளம், விஐ தொகுப்பான், டிசிபி/ ஐ. பீ ஆகிய பல கூடுதல் வசதிகள் பிஎஸ்டி யூனிக்ஸின் பங்களிப்பாகும். இன்றைக்கு யூனிக்ஸின் பரவலுக்கும், கல்விக் கூடங்களை இணையத்தில் இணைப்பதற்கும் காரணமாக அமைந்தது பிஎஸ்டி யூனிக்ஸ். 1பி. எஸ்டி என்ற பதிப்பில் தொடங்கி 4. 3 பிஎஸ்டி பதிப்புவரை வெளியிடப்பட்டது. 1993 ஆண்டுடன் பிஎஸ்டி யூனிக்ஸின் வெளியீடு நிறுத்தப்பட்டு விட்டது.

BSN : பிஎஸ்என் : வணிக சந்தாதாரர் பிணையம் என்று பொருள்படும் Business Subscriber Network என்பதன் குறும்பெயர்.

b-spline : பி-ஸ்ப்ளைன் : கணினி வரைகலையின் தொடர்ச்சியை உறுதி செய்யும் கணித வாய்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வளைவு.

. bt : . பி. டீ : ஓர் இணைய தள முகவரியின் இறுதியில், பூட்டான் நாட்டைச் சார்ந்த தளம் என்பதைக் குறிக்க இணைக்கப்படும் பெருங்களப் பிரிவுப் பெயர்.

BTAM : பிடாம் : அடிப்படை தொலைத் தொடர்பு அணுகுமுறை என்று பொருள்படும் Basic Telecommunication Access Method என்பதன் குறும்பெயர். தொலைதூர சாதனங்களுடன் படித்து எழுதி தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒரு அணுகு முறை.

B-tree : பி. மரம் : சமனாக்கிய மரம் என்று பொருள்படும் Balanced Tree என்பதன் குறும்பெயர். தரவுக் கட்டமைப்பு