பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bubble memory

187

budget forcasting model


ஆனால் மைபீச்சு அச்சுப்பொறியில் பீஸோ மின்படிகங்கள் பயன் படுத்தப்படுகின்றன.

bubble memory : குமிழ் நினைவகம் : காந்தப் புள்ளிகளாக தகவலை சேமித்து வைக்கும்முறை. ஒரு மெல்லிய, மின்கடத்தாப் பொருளால் ஆன படலத்தின் (film) மீது குமிழ்கள் நிற்கின்றன. அழியாத இருப்பகத் திறனை இது அளிக்கிறது.

bubble sort : குமிழி வரிசைப் படுத்தல் : ஒரு பட்டியலை வரிசைப் படுத்தப் பயன்படும் தருக்கமுறை. ஒரு பட்டியலில் அடுத்தடுத்துள்ள இரண்டு உறுப்புகளை எடுத்துக் கொண்டு அவை சரியான வரிசையமைப்பில் இல்லாவிடில் அவற்றை இடமாற்றம் செய்யும் முறை. இந்த முறையில் nஉறுப்புகள் உள்ள பட்டியலில் ஒர் உறுப்பு n-1உறுப்புகளுடன் ஒப்பிடப்பட்டு மிகச்சிறிய உறுப்பு, பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுகிறது. இச்செயல்முறை அடுத்தடுத்துள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் மேற் கொள்ளப்படுகிறது. அடிப்பாகத்திலிருந்து எடை குறைந்த காற்றுக் குமிழ் உந்தியுந்தி நீரின் மேற் பரப்புக்கு வருவதுபோல குறைந்த மதிப்புள்ள உறுப்பு பட்டியலின் உச்சிக்குக் கொண்டு வரப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

bucket : வாளி : கூட்டாக அழைக்கப்படும் பதிவேடுகளின் குழுவைச் சேமித்து வைக்க இருப்பகத்தில் இருக்கும் குறிப்பிட்ட பகுதி. வன்பொருள் தொடர்பானதாக இருக்கலாம் அல்லது 'தற்சார்பு முகவரியாக்கம்' (hasing) மூலம் முடிவு செய்யக்கூடியதாக இருக்கலாம்.

bucket sort : கலன் வரிசையாக்கம்.

buddy system : மொட்டு அமைப்பு : நினைவகத்தை நிர்வகிக்கும்முறை. இதன் அளவுகள் 2-ன் மடங்காக இருக்கும்.

budget forcasting model : நிதி நிலை முன்மதிப்பீட்டு மாதிரியம் : தரமான கணக்கீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி தனித்தனி துறையிலிருந்து அளிக்கக்கூடிய நிதிநிலைத் தகவல்களைத் தொகுப்பதற்குப் பயன்படக் கூடிய மாதிரியம். பணப் பாய்வு, ஒரு பங்குக்கான வருமானம் மற்றும் பிற நிதித் துறை விகிதாச்சாரங்களை முன்னறிவிப்புச் செய்யும் திறன்களையும் இதில் உள்ளடக்கலாம். இதன் விளைவாக நிதிநிலைக்கு ஏற்றவாறு, விரிதாள் பணித் தொகுப்புகளில் இத்தகைய