பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

budgeting

188

buffer storage


மாதிரியங்கள் பொதுவாக சேர்க்கப்படும்.

budgeting : வரவு செலவுத் திட்டமிடல்.

buffer : இடையகம்;இடைநிலை நினைவகம் : பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகின்ற கணினியின் செயலகத் இணைப்பதற்குப் பயன்படுத்தலாம்.

buffer amplifier : இடையகப் பெருக்கி.

buffer card punch : இடையக துளை அட்டை.

buffered computer : இடைத் தடுப்புக் கணினி : ஒரே நேரத்தில் உள்ளீடு / வெளியீடு மற்றும் செயலாக்க நடைமுறைகள் அளிக்கின்ற கணினி.

buffer flush : இடையகம் வழிதல் இடைநிலை : நினைவகத்திலிருந்து வட்டுக்குத் தரவுவை மாற்றுதல்.

buffering : இடைச்சேமிப்பு : தகவல் தொடர்பு பாதையில் தரவுகளை அனுப்புவதைத் தாமதப்படுத்துவதோ அல்லது தற்காலிகமாக சேமித்து வைப்பதோ செய்யப்படுவது.

buffer memory : இடை நினைவகம்;இடைநிலை நினைவகம் : உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது.

buffer pool : இடையகக் குவிப்பு : கூடுதல் இருப்பிடங் களுக்காக நினைவகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதி.

buffer storage : இடைநிலைச் சேமிப்பு : இடைநிலை தகவல் தேக்கம் : 1. ஒரு குறிப்பிட்ட தரவுத் தொகுதியை, இயக்க முறைமையோ, ஒர் நிரலாக்கத் தொடரோ பயன்படுத்திக் கொள்ளத் தயாராகும் நேரம் வரை, கணினி நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் முறை. 2. ஒரே வேகத்தில் செயல்படாத இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது, தகவல் எடுத்தாளப்படும் வரை சிறிதுநேரம் தற்காலிகமாகத் தேக்கிவைக்கும் இடம். விசைப் பலகையிலிருந்து வரும் தகவலை செயலி படிக்கும் போது, அச்சுப்

பொறிக்குத்