பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bulk storage

190

bundled software


திலுள்ள இரும்புத் துகள்களைச் சிதைத்து தகவல் அனைத்தையும் துடைத்திட முடியும்.

bulk storage : மொத்த சேமிப்பகம்;மொத்த இருப்பகம் : அதிக அளவில் தகவல்களைச் சேமிப்பது. பொதுவாக, நீண்டகால தேவைக்காக இவ்வாறு செய்யப்படும்.

bullet : பொட்டு : ஒரு பட்டியலில் உள்ள வகைபாடுகளைத் தொடங்கப் பயன்படுத்தப்படும் பொட்டுப் போன்ற அடையாளம்.

builetin board : அறிக்கைப் பலகை, தகவல் பலகை : கணினியைப் பயன்படுத்துபவர்கள் செய்திகளையோ அல்லது நிரல்களையோ மற்றவர்களுக்காக அனுப்ப அனுமதிக்கும் கணினி முறைமை. மின்னணு அறிவிப்புப் பலகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

bulletin board service : அறிக்கைப் பலகை சேவை : ஒரு வணிக தகவல் தொடர்பு கட்டமைப்பு. இதில் சந்தாதாரர்கள் செய்திகளை அனுப்பலாம்;மென்பொருள் ஆலோசனை பெறலாம்;நிரல்களை ஏற்றிப் பெறலாம்;இன்னும் பலவற்றைச் செய்யலாம். BBS என்று சுருக்கி அழைக்கப்படுகிறது. Bulletin Board System என்றும் சொல்லப்படுகிறது.

bullet-in font : உள்ளமைந்த எழுத்துரு : அச்சுப்பொறியின் ரோமில் (ROM) நிரந்தரமாகக் குறியீடு இடப்பட்ட எழுத்துருக்கள்.

bullet proof : பிழைதடுப்புத் திறன் : வேறொரு கணினியின் வன் பொருள் குறைபாடுகளால் நல்ல படியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கணினிச் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தடுத்துக் காக்கும் திறன்.

bullets and numbering : பொட்டும் எண்ணிடலும்.

bump mapping : பம்ப் மேப்பிங் : கணினி வரைகலையில் ஒரு தொழில் நுட்பம்.

bunde : கட்டு;உள்ளிணைந்த : மென்பொருள் துணைப் பொருள்கள் மற்றும் சேவைகளை ஒரு கணினி விலையின் பகுதியாகச் சேர்ப்பது.

bundled : உள்ளினைக்கப்பட்ட : கணினி பொருட்கள் மற்றும் சேவைகள் முழுவதையும் ஒரே விலைக்கு சேர்த்துத் தருவதைக் குறிப்பது.

bundled Software : உள்ளிணைந்த மென்பொருள் : கணினி அமைப்பின் மொத்த