பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bush button

194

Business Equipment


சுற்றிலும் உள்ள அட்டைகளுக்கு வெளியே ஒரு அச்சிட்ட மின் சுற்று அட்டையைத் தள்ளும் அட்டை. அது முதலில் ஒரு விரிவாக்க இடத்தில் பொருத்தி பின்னர் மின்பாட்டை விரிவாக்கியில் சேர்க்கிறது. இதில் பல விரிவாக்க இடங்கள் மட்டும் இருக்கலாம் அல்லது அவற்றில் மின்சக்தி அளிக்கும் வசதியும் இருக்கலாம்.

bush button : அழுத்து பொத்தான்.

bush, vannevar (1890-1974) : புஷ், வான்னேவர் : மின் தடங்களினால் ஏற்படும் கணித சமன்பாட்டு வேறுபாடுகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, 1930ஆம் ஆண்டு பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய முதல் தானியங்கிக் கணினியை உருவாக்கினார். மாறுபாட்டு பகுப்பாய்வி (Differential Analyzer) என்று அழைக்கப்பட்ட கணினி, இன்றைய ஒப்புமை கணினிகளுக்கெல்லாம் முன்னோடியானது. 100 டன் எடையுள்ள இக்கணினியில் பல்லாயிரக்கணக்கான வெற்றிடக் குழல்கள் பயன்பட்டன.

business applications : வணிகப் பயன்பாடுகள் : சம்பளப்பட்டி, வரவேண்டிய, கொடுக்க வேண்டிய பணம் பற்றிய கணக்குகள், இருப்பு கணக்கெடுத்தல் போன்ற அன்றாட கணக்கீட்டு நடைமுறைகளுக்குப் பயன்படும் கணினிப் பணித் தொகுப்புகள் அறிவியல் பயன்பாடுகளுக்கு மாறானது.

business computer : வணிகக் கணினி : வணிகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கணினி.

business data processing : வணிகத் தரவு செயலாக்கம் : சம்பளப்பட்டி, பட்டியலிடல், கணக்கெடுத்தல் போன்ற வணிக நோக்கங்களுக்காக நடைபெறும் தரவு செயலாக்கம்.

Business Equipment Manufacturers Association (BEMA) : பீமா : வணிகக் கருவி தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பொருள்படும் Business Equipment Manufacturers Association என்பதன் குறும்பெயர். கணினி கருவிகள் மற்றும் அலுவலக எந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கொண்ட சங்கம். பயன்பாட்டாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், பொது நலனுக்காக தகவலைப் பயன்படுத்தவும், கணினி மற்றும் தகவல் செயலாக்கக் கருவிகளுக்கான தர நிர்ணயங்களை உருவாக்கவும் வழி காட்டுவதே இதன் நோக்கங்கள். ஒரு வாராந்தர செய்தி மடலும்,