பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cable ribbon

201

caching


கம்பித் தடத்தில் இணைந்து செயல்படும் இணக்கியிலிருந்து மாறுபட்டது. கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுவடம் வழியாகத் தரவுவை அனுப்பவும் பெறவும் செய்கிற இணக்கி. வினாடிக்கு 500 கிலோ துண்மி (பிட்) கள் வரை தரவு பரிமாற்ற வேகமுள்ளவை வட இணக்கிகள். தற்போது அதிகமாய்ப் பயன்பாட்டில் உள்ள வழக்கமான இணக்கிகளைவிட அதிக வேகத்தில் தகவலை அனுப்ப வல்லவை.

cable ribbon : வட நாடா.

cable television : வடத் தொலைக்காட்சி.

cabling diagram : வட வரைபடம் : கணினி அமைப்பில் அதன் பாகங்களையும் புறச்சாதனங்களையும் இணைக்கும் வடங்களின் பாதைகளைக் காட்டும் திட்ட வரைபடம். கணினியின் வட்டகங்களை அவற்றின் இயக்கிகளோடு இணைக்கும் வட இணைப்புகளைப் புரிந்துகொள்ள இத்தகைய வரைபடங்கள் தேவை.

cache : இடைமாற்றகம் : தற்காலிக இருப்பகமாகப் பயன்படும் ஒரு சிறிய அதிவேக நினைவகம்.

cache card : இடைமாற்று அட்டை : ஒரு கணினியின் இடைமாற்று நினைவகத்தை (cache memory) அதிகப்படுத்தும் விரிவாக்க அட்டை.

cache controller : இடை மாற்றகக் கட்டுப்படுத்தி : இடை மாற்று நினைவகத்திற்கு படி / எழுது இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் மின்னணு மின்சுற்று. கட்டுப்பாட்டு பொறியானது இன்டெல் 82385 போன்ற ஒரு சிப்புவாகவோ அல்லது தனிச் சாதனமாகவோ இருக்கலாம்.

cache memory : இடைமாற்று நினைவகம்; அவசரத்தேவை நினைவகம் : தகவலைத் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான சிறிய அதிவேக நினைவகம். மெதுவாக இயங்கும் மைய நினைவகத்திற்கும், வேகமான மையச் செயலகத்துக்கும் இடையில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது. அழைத்தெழுது அட்டை (scratch pad) என்றும் அழைக்கப்படுகிறது.

cache settings : இடைமாற்று அமைப்புகள்.

caching : இடைமாற்றல் : விரைவு அணுகலுக்காக இடை மாற்றம் நினைவகத்தில் தரவுகளை வைத்திருத்தல்.