பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CAFM

203

calendar programme


தகவலைப் பயன்படுத்தி ஒருபகுதி, உற்பத்திப்பொருள் அல்லது வடிவமைப்பில் உள்ள அமைப்பினை ஆராயவும் பல்வேறு சூழ்நிலைகளில் அதன் செயல்திறனை மாதிரியாகச் செய்து காட்டவும் பயன்படுகிறது.

CAFM : சிஏஎஃஎம் : Compare to Aided Factory Management என்பதன் குறும்பெயர். கணினி உதவிடும் தொழிற்சாலையாகும்.

CAGE : பெட்டி : அச்சிட்ட மின் சுற்று அட்டைகள் ஏற்றப்படும் ஒரு பெட்டி,

CAI : கேய் : கணினி உதவியுடன் கற்றுத் தரல் என்று பொருள்படும் Computer-Assisted Instruction என்பதன் குறும்பெயர்.

CAL : கால் : கணினி வலுப்படுத்திய கற்றல் என்று பொருள்படும் Computer Augmented Learning என்பதன் குறும்பெயர்.

calculate : கணக்கிடு; மதிப்பிடு.

calculated field : கணக்கிடப்படும் புலம் : பிற புலங்களைக் கணக்கிட்டு பெறப்பட்ட எண் அல்லது தரவு புலம். பயனாளரால் கணக்கிடப்படும் புலத்தில் தரவுகளை நுழைக்க முடியாது.

calculating : கணக்கிடல்; மதிப்பீடு செய்தல் : சில எண் வகையிலான உண்மைகளைச் சுருக்கி, புதிய தகவலை ஏற்படுத்தல் அல்லது புதிதாக உருவாக்குதல்.

calculations : கணக்கீடுகள் : தரவுகளின்மீது கணித செயல் முறைகள்.

calculator : கணிப்பி; கணக்கி : கணக்கீடுகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்திரக் கணித அல்லது மின்னணு எந்திரம். கணினிகளிலிருந்து மாறுபட்ட கணிப்பிகளுக்கு அடிக்கடி மனிதத் தலையீடு தேவைப்படும்.

calculator mode : கணிப்பி பாங்கு.

calculus boolean : பூலியன் வகையீட்டு நுண்கணிதம்

calendar : நாட்காட்டி.

calendar programme : நாள் காட்டி நிரல்; காலங்காட்டி நிரல் : மின்னணுக் காலங் காட்டியை ஒத்திருக்கும் ஒரு காலக்குறிப்பேட்டை படைத்துக் காட்டும் ஒரு பயன்பாட்டு நிரல். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றவேண்டிய நமது பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். சில காலங்காட்டி