பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

calligraphic sequence

206

camera - ready


கொண்டு ஒரு உருவத்தை அமைத்தல். இதற்கு அதிகச்செலவாகும். கருவி தேவைப்படுகிறது. இடஞ்சார்ந்த ஒழுங்களவு கொண்ட இதேபோன்ற வரைபடங்களைக் கொண்டதுதான் 'கம்பி உருவ' மாதிரிகள். தொடக்கக் காலத்தில் கணினி வரைபடங்களுக்குச் சமமானதாக இவை கருதப்பட்டன.

calligraphic sequence : எழுத்து வனப்பு வரிசைமுறை; வரி வடிவ வரிசைமுறை.

calling programme : அழைக்கும் நிரல் : வேறொரு நிரலைத் தொடங்கி வைக்கும் நிரல்.

calling rate : அழைப்பு வீதம்.

calling sequence : அழைக்கும் வரிசை : கொடுக்கப்பட்ட ஒரு துணை நிரல்கூறை அழைப்பதற்குத் தேவையான தரவுகள் மற்றும் குறிப்பிட்ட ஆணைத் தொகுதிகள்.

calling terminal : அழைக்கும் முனையம்.

CALL instruction : அழைப்பு ஆணை : ஆணைகளின் புதிய வரிசையை இயக்க திசை மாற்றிய பிறகு, நிரலில் தொடக்க வரிசைக்குத் திரும்பி வருவதை அனுமதிக்கும் ஆணை.

calloc : சிஅலாக் : 'சி' மொழியில் உள்ள ஒரு பணி. எம். அலாக், (malloc) ரிஅலாக் (realloc) போன்றது.

call request packet : அழைப்புக் கோருவோர் பொதிவு.

call screening : அழைப்பு வடி கட்டல்.

call setup : அழைப்பு அமைப்பு முறை.

CALS : கால்ஸ் : கணினிவழி ஈட்டுதல் மற்றும் தகவுப் பொருத்த உதவி எனப் பொருள்படும் Computer Aided Acquisition Logistics Support என்ற‌ சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வணிகமுறை விற்பனையாளர்களுடன் மின்னணு முறை தகவுப் பரிமாற்றத்துக்கான பாதுகாப்புத் தரநிர்ணயத் துறையாகும்.

CAM : கேம் : கணினி உதவிடும் உற்பத்தி எனப் பொருள்படும் Computer-Aided Manufacturing என்பதன் குறும்பெயர்.

cambridge ring : கேம்பிரிட்ஜ் வளையம் : இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வடிவமைத்த அதிவேக குறும் பரப்புப் பிணையம் (LAN).

camera - ready : அச்சுக்குத் தயாராய் : நூல் அச்சுத்துறையில் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நூலில் இடம் பெற வேண்டிய விவரங்களை