பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

card sorting

214

carriage


துளையிடும் நிலையில் உள்ள கிடைமட்ட வரிசைகளில் ஒன்று.

card sorting : அட்டை பிரித்தல்; அட்டை வரிசையாக்கம் : தனிப்பட்ட அட்டைகளில் போடப்பட்டுள்ள துளைகளுக்கேற்ப துளையிட்ட அட்டைகளைப் பிரித்து வைத்தல்.

card stacker : அட்டை அடுக்கி : துளையிட்ட அட்டை தரவு செயலாக்க எந்திரத்தைக் கடந்த பின் அட்டைகளைச் சேர்த்து வைக்கும் கொள்கலம்.

card-to-disk converter : அட்டையிலிருந்து வட்டுக்கு மாற்றும் பொறி : துளையிட்ட அட்டைகளிலிருந்து வட்டு சேமிப்பகத்துக்கு தரவுகளை நேரடியாக மாற்றித் தரும் சாதனம்.

card-to-tape converter : அட்டையிலிருந்து நாடாவுக்கு மாற்றும் பொறி : துளையிட்ட அட்டைகளிலிருந்து காந்த அல்லது காகித நாடாவுக்கு தரவுகளை நேரடியாக மாற்றும் சாதனம்.

card verification : அட்டை சோதித்தல்; அட்டை சரிபார்ப்பு : விசைத் துளையிடலின் துல்லியத்தை சோதிக்கும் செயல்முறை. அதே தரவு மூலத்தைப் படித்துச் சோதிக்கும் பொறியின் விசைகளை அழுத்தி, முதலில் துளையிட்டதை இரண்டாவதாக ஒருவர் சோதிப்பார். ஏற்கனவே துளையிடப்பட்ட அட்டைகளின் துளையை விசையை அழுத்தி, சோதித்து அவை சரியாக இல்லையென்றால் பிழை என்பதைக் காட்டும்.

card verifier : அட்டை சோதிப்பி, அட்டை சரிபார்ப்பி.

caret : கேரட் ; முகடு : 1. ஒரு எண்ணின் மூலமானது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும் குறியீடு, 2. எங்கே செய்தியை நுழைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட திரையில் அடையாளச் சுட்டியாகப் பயன்படுத்தப்படும் அடையாளம்.

carpal tunnel syndrome : கார்பல் சுரங்க உணர்வு : மணிக்கட்டைச் சுற்றிலும் உள்ள திசுக்களில், சுருங்கினாலோ அல்லது தழும்பு ஏற்பட்டாலோ முக்கிய நரம்பு சுருக்கப்படுதல். இது கைகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தக் கூடியது.

carriage : நகர்த்தி; ஏந்தி : ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப்