பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carrier working

216

carry bit


முறைமை : பல்வேறு அலைவரிசைகளை, செய்திகளைச் சுமந்து செல்லும் ஊடகமாகப் பயன்படுத்தி, ஒரே பாதையில் பல்வேறு தடங்களில் பல்வேறு செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பிவைக்கின்ற தரவு தொடர்பு முறை. ஒவ்வொரு செய்தி அலையும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுள்ள மின்காந்த அலையின் மேல் பண்பேற்றம் (modulation) செய்து ஒரே அலைக்கற்றையாக மறுமுனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, அதே அதிர்வெண் அடிப்படையில் பண்பிறக்கம் (demodulation) செய்யப்பட்டு மூலத் தரவு பெறப்படும்.

carrier working : சுமப்பி செயல்பாடு : வீச்சு மாறுவதன் மூலம் ஒரு பேச்சை அதன் தொடக்க ஒலி அலைவரிசையிலிருந்து (300 முதல் 3, 400 ஹெர்ட்ஸ்) உயர் "சுமப்பி" அலைவரிசைக்கு மாற்ற முடியும். உலகின் பெரும்பாலான தொலைதூர தொலைபேசி அமைப்புகள் 12 அலைவரிசை குழுவையே பயன்படுத்துகின்றன. 12 குரல் அலைவரிசைகளாக மாற்றப்பட்டு 18 கிலோ ஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் அடங்குகின்றது. இவை 60-108 கிலோஹெர்ட்ஸ்வரை செயல்படுபவை.

carry ஏந்தி; வழிவி; மிகுதி : 1. ஒரு நெடுக்கையில் உள்ள இரண்டு இலக்கங்களின் கூட்டல் தொகை அடிப்படை எண்ணைவிடப் பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் போது ஏற்படும் சிறப்பு நிலையைக் கொண்டுவரும் செயல்முறை. 2. மிகுந்திடும் இலக்கம் அல்லது அடுத்த நெடுக்கையில் சேர்க்கப்படும் இலக்கம்.

carry bit : மீந்திடும் துண்மி : இரும எண்களின் கூட்டல் 0+0=1, 0+1=1, 1+0=1; 1+1=10 என்று அமையும். இத்தகைய இரும எண் கூட்டலைச் செய்யும் மின்சுற்றுகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மின்சுற்றும் இரண்டு உள்ளீடுகளை ஏற்கும். 0 அல்லது 1 என்பதை விடையாகத் தரும். இரண்டு உள்ளீடுகளும் 1 ஆக இருப்பின் வெளியீடு 0 ஆக இருக்கும். மீதமுள்ள 1, அடுத்த மின்சுற்றின் உள்ளீடாக அமையும். இவ்வாறு இரும எண் கூட்டலில் இரண்டு 1-களைக் கூட்டும்போது பெறப்படும் 1, 0 வில், 0 விடையாக