பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cascading windows

221

case-sensitive search


அடுக்கி வைக்கப்பட்ட பக்கங்கள். ஹெச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்குபவர்கள் இது போன்று வடிவமைக்கப்பட்ட பக்கங்களை இணைத்துக் கொள்வதற்கான வரைமுறைகளை வைய விரிவலைக் கூட்டமைப்பு நிர்ணயம் செய்துள்ளது. ஹெச்டிஎம்எல் 3. 2-ன் தர நிர்ணயத்தில் இவை அடங்கியுள்ளன. ஒரு வலைப் பக்கத்தில் உரை விவரங்கள் இடம்பெறும் விதம், அதன் எழுத்துரு, உருவளவு, வண்ணம் போன்றவை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளன.

cascading windows : அடுக்கி வைத்த சாளரங்கள் : வரைகலைப் பணிச்சூழலில், தலைப்புப்பட்டை தெரியும் வண்ணமாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும் பல்வேறு சாளரத் திரைகள்.

CASE : கேஸ் : 1. சி, சி ++, ஜாவா சி #, மொழிகளில் நிரல்களை எழுதுவதில் பயன்படும் கட்டளைச் சொல். 2. தரவு அமைப்பினை உருவாக்கும் எல்லா நிலைகளிலும் பயன்படும் மென்பொருள் வழக்கமான தொழில்நுட்பங்களை உருவாக்க தானியங்கி முறைகளைப் பயன்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் பொருந்தும் ஒரு மொழியை உருவாக்குவதே இதன் இறுதி இலக்கு.

case control structure : நிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு.

case logic : எழுத்துருவ தருக்கம்.

case sensitive : எழுத்தின் தன்மை உணர்வு : தலைப்பெழுத்து, கீழெழுத்துகளை வேறுபடுத்துவது. இத்தகைய மொழியில் தலைப்பெழுத்து "A" வுக்கும் கீழெழுத்து "a"க்கும் உள்ள வேறுபாட்டை கணினி கண்டறியும்.

case-sensitive search : எழுத்து வடிவ உணர்வுத் தேடல் : ஒரு தரவு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களில் ஒரு குறிப்பிட்ட விவரத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்படும் ஒருமுறை. ஆங்கிலச் சொற்களை சிறிய எழுத்தில் அல்லது பெரிய எழுத்தில் அல்லது கலந்த எழுத்துகளில் எழுதலாம். தேடும்போது வடிவ ஒப்புமை இல்லாமலும் தேடலாம். ஒர் ஆவணத்தில் Computer என்ற சொல் உள்ளதா எனத் தேடும்போது, COMPUTER, computer என்ற சொற்களையும் கண்டறிந்து சொல்லும். ஆனால், வடிவ அடிப்படையில் தேடினால், Computer