பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

case sensitivity

222

cassette recorder


என்ற சொல் இருந்தால் மட்டுமே உள்ளதெனக் காட்டும். computer, COMPUTER ஆகிய சொற்களைப் புறக்கணிக்கும்.

case sensitivity : எழுத்துவடிவ உணர்வு : ஒரு நிரலாக்க மொழியில், ஒரு நிரலில் சிறிய எழுத்து பெரிய எழுத்து வடிவங்களை வேறுபடுத்திப் பயன்படுத்துதல். எடுத்துக்காட்டாக சி, சி++ மற்றும் ஜாவா மொழிகளில் sum, SUM, Sum ஆகிய மூன்று சொற்களும் வேறு வேறாகவே அறியப்படும். எழுத்து வடிவ உணர்வுமிக்கவை என்று இம்மொழிகளைக் கூறுவர். ஆனால் பேசிக், பாஸ்கல் போன்ற மொழிகளில் மேற்கண்ட மூன்று சொற்களும் ஒன்றாகவே கருதப்படும். இம்மொழிகள் வடிவ உணர்வற்ற மொழிகள்.

case statement : கிளைபிரி கூற்று : அடா, பாஸ்கல், சி, சி++, ஜாவா மற்றும் விசுவல் பேசிக் மொழிகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக் கட்டளைத் தொடர். ஒரு மாறியின் மதிப்பைச் சோதித்து அம்மதிப்பின் அடிப்படையில் வெவ்வேறு பணிகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கட்டளை. ஒன்றுக்குள் ஒன்றாக அமையும் if ... then ... else கட்டளைக்குப் பதிலாக சில சூழ்நிலைகளில் கிளைபிரி கட்டளையமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

cashless society : பணமிலாச் சமுதாயம் : வாங்குபவரின் வங்கிக் கணக்கிலிருந்து கொடுப்பவரின் வங்கிக் கணக்குக்கு உடனடியாகப் பணத்தைச் செலுத்துவதன் மூலம் வாங்கும் பரிமாற்றத்தை முடிக்கும் கணினி அமைப்பு. ரொக்கமாக எதுவும் மாற்றப்படுவதில்லை. சம்பளக் காசோலைக்குப் பதிலாகவும், சரக்குகள் மற்றும் சேவைகளுக்கும் இவ்வாறு பணமாற்றம் செய்யப்படுகிறது.

cassette : பேழை; நாடாப் பெட்டி; ஒளிச் சுருள்; ஒளிப் பேழை : தரவு சேமிப்புக்குப் பயன்படும் காந்த நாடாவைக் கொண்டுள்ள சிறிய பேழை.

Cassette drive : பேழை இயக்ககம்.

cassette interface : நாடா இடைமுகம்; பேழை இடைமுகம் : ஒரு கணினிக்கும் ஒரு காந்த நாடாவுக்கும் இடையில் தரவு பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மின்சுற்று.

cassette recorder : பேழைப் பதிவி; நாடாப் பதிவி : நாடாப்