பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ccNUMA

226

cd1


முனைக்கு அனுப்பி வைக்கவும் பரிந்துரை செய்த நான்கு பிரிவிலான நெறிமுறைகள். முதலிரண்டு பிரிவுகள் தொடர்முறை (analog) சாதனங்களுக்கும் 3, 4-வது பிரிவு நெறி முறைகள் இலக்கமுறை (digital) சாதனங்களுக்கும் ஆனவை.

ccNUMA : சிசிநூமா : நினைவக அணுகலில் ஒரு வழிமுறை. Cache Coherent Non-Uniform Memory Access என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒத்தியைந்த பல்செயலாக்கக் கணினி முறைமைகள் (Symmetric, Multiprocessing System) பலவற்றை, அதிவேக/அகல அலைக்கற்றையுடைய வன்பொருள் ஊடகம் மூலம் ஒருங்கிணைத்து ஒரே கணினி அமைப்பாகச் செயல்பட வைக்கும் ஒரு தொழில்நுட்பம்.

CCP : சிசிபீ : Certification in Computer Programming என்பதன் குறும்பெயர். கணினி நிரலாக்கத்தில் சான்றிதழ் என்பது பொருள். அமெரிக்கா, கனடா மற்றும் பல பன்னாட்டு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நிரலாக்க அறிவையும், வணிக, அறிவியல் மற்றும் சிறப்பு பயன்பாடுகள் உருவாக்கம் போன்ற திறன் குறித்தும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தரவு, கோப்பு முறைமை, நிரலாக்க மொழி, தொழில்நுட்பம், வன்பொருள் - மென்பொருள்களுக்கிடையே பரிமாற்றம், மக்களுடன் பரிமாற்றம் போன்ற துறைகளில் அறிவு வலியுறுத்தப்படுகிறது.

C3L : சி3எல் : Complementary Constant Current Logic என்பதன் குறும்பெயர்.

CD1 : சிடி (CD) : கோப்பகம் மாறு என்று பொருள்படும் change directory என்ற தொடரைக் குறிக்கும் கட்டளைச் சொல். எம்எஸ்டாஸ், யூனிக்ஸ் மற்றும் எஃப்டீயீ கிளையன் நிரல்களில் இக்கட்டளை பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டளைச் சொல்லையடுத்துத் தரப்படுகின்ற பாதையுடன்கூடிய இன்னொரு கோப்பகத்துக்கு மாறிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, C : \VB> CD \VC\Project மூலம் VB என்னும் கோப்பகத்திலிருந்து, VC என்னும் கோப்பகத்திலுள்ள Project என்னும் உள்கோப்பகத்துக்கு மாறிக் கொள்ள முடியும். பிறகு அங்கிருக்கும் கோப்புகளையும் பயன்பாடுகளையும் எளிதாகக் கையாள முடியும்.