பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CD-ROM

229

CD-ROM juke box


குறுவட்டெழுதி

வட்டில் இந்த சாதனம் மூலம் ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது. நிரந்தரத் தரவு சேமிப்புக்காகவும், பாதுகாப்பு நகலாக (Backup) பயன்படுத்தவும், மென்பொருள்களை பல நகல்கள் எடுத்து வினியோகிக்கவும் குறுவட்டெழுதி மூலம் வட்டில் தரவுகள் எழுதப்படுகின்றன.

CD-ROM : சிடி-ரோாம் : படிக்க மட்டுமேயான குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk - Read Only Memory என்ற‌ தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விவரச் சேமிப்பகத்தில் ஒருவகை. அதிகக் கொள்திறன் உள்ளது (650 MB). தரவுவைப் படிக்க மின்காந்த முறைக்குப் பதில் லேசர் கதிர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது (Write Once Read Many Times).

CD-ROM Changer : சிடி ரோம் மாற்றி.

CD-ROM drive : குறுவட்டகம்; குறுவட்டு இயக்ககம் : படிக்க மட்டுமேயான தரவுகள் பதியப்பட்டுள்ள குறுவட்டினை கணினியில் வைத்துப் பயன்படுத்தக்கூடிய வட்டகம் அல்லது வட்டு இயக்ககம்.

CD-ROM juke box : குறுவட்டு தொகுதிப் பெட்டி : குறுவட்டுகளின் தொகுதியை கணினியுடன் இணைத்துக் கையாள வழி செய்யும் வட்டியியக்குச் சாதனம். 200 குறுவட்டுகள்