பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CD-ROM/XA

230

cell animation


வரை இதில் வைத்துப் பயன்படுத்த முடியும். பயனாளர் எந்த வட்டிலுள்ள தரவுவையும் கையாள விரும்பலாம். இச்சாதனம் அக்குறிப்பிட்ட வட்டினைத் தேடிக் கண்டறிந்து தரவுவை எடுத்துத் தரும். ஒரு நேரத்தில் ஒரு குறுவட்டு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட குறுவட்டினைக் கையாளும் திறனுள்ள கணினியெனில், தொகுதிப் பெட்டியிலுள்ள வட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கையாள முடியும்.

CD-ROM/XA : சிடி‍-ரோம்/எக்ஸ்ஏ; குறுவட்டு/எக்ஸ்ஏ : சிடி-ரோம் எக்ஸ்டெண்டடு ஆர்க்கிடெக்சர் என்பதன் சுருக்கச் சொல். ஒரு விரிவாக்கப்பட்ட குறுவட்டுத் தரவு பதிவுமுறை. ஃபிலிப்ஸ், சோனி, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. சிடி-ரோம்/எக்ஸ்ஏ, ஐஎஸ்ஓ 9660 தர நிர்ணயத்திற்கு ஒத்தியல்பானது.

CDV : சிடிவி : 1. இறுக்கப்பட்ட இலக்கமுறை ஒளிக்காட்சி என்று பொருள்படும் Compressed Digital Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேக ஊடகங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏற்ப இறுக்கிச் சுருக்கப்பட்ட ஒளிக்காட்சி உருவப்படங்கள். 2. குறுவட்டு ஒளிக்காட்சி என்று பொருள்படும் Compact Disc Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 5 அங்குல விட்டமுள்ள வட்டினைக் குறிக்கிறது.

CE : சிஇ : வாடிக்கையாளர் பொறியாளர் எனப் பொருள்படும் Customer Engineer என்பதன் குறும்பெயர்.

cell : கலம்; சிற்றம் : 1. ஒரு எழுத்து, ஒரு பைட் அல்லது ஒரு சொல்போன்ற தகவலின் ஒரு அலகை மட்டும் சேமிக்குமிடம். 2. ஒரு மின்னணு விரிதாளின் அணிபோன்ற அமைப்பில் கிடைக்கையும் நெடுக்கையும் சந்திக்கும் இடம்.

cell address : கல முகவரி : விரிதாள் செயல்முறையில் நெடுக்கையின் பெயர் (ABC..) மற்றும் கிடக்கை எண் (1, 2, .....) இரண்டும் சேர்ந்த முகவரி. A1, G22, J320 என அமையும்.

Cell animation : கலை அசைவூட்டம் : ஒரு அசைவூட்டத் தொழில்நுட்பம். இதில் ஒரு ஓவியம் பின்னணியில் நிலையாக இருக்கும். அசைவூட்டப்பட்ட உருவங்கள் ஓவியத்தின் மீது நகரும்போது அவை