பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

centralized design

233

centronics parallel interface


வைத்திருக்கும் கோட்பாடு. கள அலுவலகச் செயல்பாடுகளில் தரவு செயலாக்கம் இல்லாத நிலை.

centrafized design : மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு : ஒரு நிறுவனத்தின் தரவுச் செயலாக்க வசதிகளை, ஒரு தனி தரவுச் செயலாக்கத் துறையே வழங்கும் தரவு அமைப்பு.

centralized network configuration : மையப்படுத்தப்பட்ட பிணையத் தகவமைவு : ஒரு மையக் கணினியின் தொடர்புடன் பெரும்பாலான பணிகளைச் செய்யும் ஏற்பாடுள்ள கணினிப் பிணையம். நட்சத்திரப் பிணையம் என்றும் அழைக்கப்படுகிறது.

centralized processing : மையப்படுத்தப்பட்ட செயலாக்கம் : ஒரு தனி, மைய இடத்திலிருந்து ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளை இணைத்து செயலாக்கம் செய்தல். இதன் பொருள் என்னவென்றால் தரவு மையத்துடன் நிறுவனத்தின் அனைத்து முனையங்களையும் இணைத்து செயல்பட வைக்கப்படுகிறது என்பதே.

centred text : மையப்படுத்திய‌ உரை : சொல்லமைவுகளை ஒரு வரியின் மையத்தில் அமைத்தல். ஒரு பக்கத்தில் இடது ஓரம் அல்லது வலது ஓரத்தில் இல்லாமல் மையத்தில் இடம் பெறும் சொல் அல்லது சொற்றொடர்.

centronics interface : சென்ட்ரானிக்ஸ் இடைமுகம் : கணினிகளையும் அச்சுப் பொறிகளையும் இணைக்கும் புகழ் பெற்ற ஒரேநேர பரிமாற்ற அமைப்பு. கணினிகளுக்கும் அச்சுப் பொறிகளுக்கும் இடையில் தரவு தொடர்புக்கு ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கும் திட்டத்தைச் செயல்படுத்திய அச்சுப்பொறி உற்பத்தி நிறுவனம் சென்டிரானிக்ஸ்.

centronics parallel interface : சென்ட்ரானிக்ஸ் இணைவழி இடைமுகம் : கணினிக்கும் அதன் புறச்சாதனங்களுக்கும் இடையேயான இணைவழி தரவு பரிமாற்றப் பாதைகளுக்கான தர நிர்ணயம். அச்சுப் பொறிகளை உற்பத்தி செய்யும் சென்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தத் தர நிர்ணயத்தை முதலில் உருவாக்கியது. சென்ட்ரானிக்ஸின் இணைவழி இடை முகம், எட்டு இணைவழி தரவு தடங்களையும் கட்டுப்பாடு மற்றும் நிலையறி தரவுக்கான கூடுதல் தடங்களையும் வழங்குகிறது.