பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

censorship

234

CERT


censorship : தணிக்கைமுறை : ஒரு தரவு தொடர்பு ஊடகத்தின் வழியே ஆட்சேபத்துக்குரிய செய்திகளைப் பரப்பக் கூடாது எனத் தடை செய்யும் முறை. இணையத்தில் செய்யப்படும் தரவு பரப்புகைக்கு இத்தகைய தணிக்கை முறை கிடையாது. ஆனால் இணையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகள் பலவிதமான‌ கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றன. எடுத்துக்காட்டாக, இணையத்தில் செய்திக் குழுக்களில் alt என்னும் பிரிவில் முழுவதுமோ, alt. sex அல்லது alt. music write-power ஆகிய பிரிவுகளில் வெளியிடப்படும் ஆபாசமான ஆட்சேபத்துக்குரிய செய்திகள் செய்திக் குழுவின் இடையீட்டாளரால் (moderator) தணிக்கை செய்யப்படுகின்றன. சிலநாடுகளில் அந்நாடு பின்பற்றும் தேசியக் கொள்கை அடிப்படையில் சில அரசியல் மற்றும் பண்பாட்டு வலைத் தளங்களை அந்நாட்டுப் பயனாளர்கள் பார்வையிட அனுமதிப்பதில்லை.

CEO : முதன்மை மேலாண் அலுவலர்.

CERN : செர்ன் : அணு இயற்பியலுக்கான ஐரோப்பிய ஆய்வுக்கூடம் என்று பொருள்படும் Conseil Europeen Pour La Recherche Nucleaire (The European Laboratory for Particle Physics) என்ற பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் செர்ன் ஆய்வுக் கூடம் அமைந்துள்ளது. 1989-ஆம் ஆண்டில் இந்த ஆய்வுக் கூடத்தில்தான் டிம் பெர்னர்ஸ்-லீ வையவிரிவலையை (World Wide Web) உருவாக்கினார். அறிவியல் ஆய்வு அறிஞர்களுக்கிடையே தரவு தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாய் இருந்தது.

CERN server : செர்ன் வழங்கன் கணினி : செர்ன் ஆய்வுக் கூடத்தில் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய ஹெச்டிடிபீ (HTTP) வழங்கன் கணினிகளில் ஒன்று. இணையம் முழுவதிலும் இப்போதும் செர்ன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் சேவைகள் இலவசமாகவே கிடைக்கின்றன.

'CERT : செர்ட் : கணினி அவசர நடவடிக்கைக் குழு என்று பொருள்படும் Computer Emergency Response Team என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையப் பயனாளர்களுக்கு 24 மணி நேரமும் கணினிப் பாதுகாப்பு