பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

certification

235

CGI-bin


ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் இது. புதிய நச்சுநிரல் (Virus) மற்றும் வேறெந்த கணினிப் பாதுகாப்பு அபாயம் குறித்தும் ஆலோசனைகள் பெறலாம்.

certification : சான்றளிப்பு : 1. ஒரு மென்பொருள் அதன் செயல்திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்து விட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் அளித்தல்.

. cf : . சிஏஃப் : மத்திய ஆஃப்ரிக்கக் குடியரசில் செயல்படும் இணைய தள முகவரிகளில் குறிப்பிடப்படும் பெரும் புவிக்களப் பெயர்.

. cg : . சிஜி : இணைய தள முகவரி, காங்கோ நாட்டில் பதிவுசெய்யப்பட்டது என்பதைக் குறிப்பதற்கான பெரும் புவிக்களப் பெயர்.

CGA : சிஜிஏ : வண்ண வரை கலைத் தகவி என்று பொருள்படும் Colour Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981இல் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒளிக்காட்சித் தகவிப் பலகை சிஜிஏ, பல்வேறு எழுத்து மற்றும் வரை கலைக் காட்சி முறைகளைத் தர வல்லது. எழுத்து முறைகளில் 16 நிறங்களில் 25 வரிகள், 80 எழுத்துகள், 25 வரிகள்/40 எழுத்துகள் காண்பிக்கும் முறைகளும் உண்டு. 2 நிறங்களில் 640 கிடைமட்ட படப் புள்ளிகளும் (pixels), 200 செங்குத்துப் படப் புள்ளிகளும் இடம்பெறும் வரைகலைக் காட்சி முறையும், 320x200 படப்புள்ளி, நான்கு நிறக் காட்சி முறையும் உண்டு.

CGI : சிஜிஐ : பொது நுழை வாயில் இடைமுகம் எனப் பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஹெச்டீடீபீ போன்ற தரவு பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும், தரவு தளம் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென்பொருள் தொடர்பான விவரப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புரவன் கணினிகளுக்கிடையேயும் நடைபெறும் தரவு தொடர்புக்குரிய செந்தரக்கட்டுப்பாடுகளை இது குறிக்கிறது.

cgi-bin : சிஜிஐ-பின் : Common Gateway Interface-binaries என்ற தொடரின் தலைப்பெழுத்துக்