பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CGI script

236

chaining search


குறும்பெயர். ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளில் சிஜிஐ நிரல்களின் மூலம் இயக்கப்படும் புறநிலைப் பயன்பாடுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோப்பகம் (directory).

CGI script : சிஜிஐ உரைநிரல்.

. ch : . சிஹெச் : இணைய தளங்களில் சுவிட்சர்லாந்து நாட்டுத் தளமுகவரியில் குறிப்பிடப்படும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர்.

Chad : காகிதத் துண்டு : சேமிப்புச் சாதனத்தில் துளையிடப்பட்டவுடன் தனியாக விழும் நாடா அல்லது தொடர் எழுதுபொருளில் துளையிட்டவுடன் வெளியே விழும் துண்டுக் காகிதம்.

chain : சங்கிலி : 1. கட்டுகள் மூலம் ஏடுகளை இணைத்தல். கடைசி ஏட்டுக்கும் முதல் ஏட்டுக்கும் இதன் மூலம் இணைப்பு ஏற்படுத்தப்படும். 2. வரிசையாகச் செய்ய வேண்டிய செயல் முறைகள்.

chained file (s) : இணைக்கப்பட்ட கோப்புகள் : ஒவ்வொரு பிரிவு தரவு கட்டமும் அடுத்த ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் கோப்பு பாயின்டர் எனப்படும் சுட்டுகளைப் பயன்படுத்தி தரவு கட்டங்களை இணைத்துள்ள தரவு கோப்பு.

chained files : சங்கிலியிடப்பட்ட‌ கோப்புகள் : சுட்டுக் கருவிகள் மூலம் தொடராக இணைக்கப்பட்ட தரவு கோப்புகள்.

chained list : சங்கிலியிடப்பட்ட‌ பட்டியல் : ஒவ்வொன்றும் அடுத்து வருவதைக் குறிப்பிடும் பட்டியல், சேமிக்கப்பட்ட அதே வரிசையிலேயே அதைத் திரும்பப் பெறவேண்டிய தேவையில்லை.

chain field : சங்கிலிப் புலம் : சேமிப்புச் சாதனத்தில் அடுத்ததாக சேர்க்கப்படாவிட்டாலும் ஆரம்பப் பதிவேட்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பதிவேட்டில் உள்ள புலத்தின் வரையறை.

chaining : சங்கிலியிடல் : 1. நிரல்கள் அல்லது செயல் முறைகள் அல்லது ஏடுகளை வரிசையாக இணைக்கும் முறை. கணினியின் முதன்மை நினைவகத்தைவிடப் பெரிதான நிரல்களை பகுதி பகுதியாகப் பிரித்து செயல்படுத்துதல். இதில் பல சிறிய பணிக்கூறுகளாக (modules) உருவாக்கப் பட்டு அவை கணினியில் ஏற்றப்பட்டு வரிசையாக செயல்படுத்தப்படும்.

chaining search : சங்கிலிமுறைத் தேடல் : பதிவேட்டில்