பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

channel adapter

238

channel, peripheral interface


மின்னணு தரவு பயணிக்கும் பாதை. 2. துணைச் சாதனங்களை கணினியுடன் இணைக்கும் தரவு தொடர்பு பாதை.

channel adapter : தடத் தகவி : பல்வேறு வன்பொருள் சாதனங்களின் வழிகளிடையே தரவு தொடர்பினை ஏற்படுத்தும் சாதனம்.

channel capacity : தடக் கொள்ளளவு/கொள்திறன்; தட வேகம்; தட இணைப்புத் திறன் : ஒரு தரவு பரிமாற்றத் தடத்தின் வேகம் அது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை துண்மிகளை (bits) அல்லது எத்தனை பாடுகளை (bauds) அனுப்பி வைக்கிறது என்ற அடிப்படையில் அளக்கப் படுகிறது.

channel command : இணைப்புக் கட்டளை : ஒரு உள்ளீட்டு/வெளியீட்டு இணைப்பைச் செயல்படுத்தும் கட்டளை.

channel, communication : தரவு தொடர்புத் தடம்.

channel emitter : தட ஒளிர்வு; தட உமிழி.

channel guide : தட வழித் துணை.

channel hop : தடத் தாவல் : இணையத்தில் தொடர் அரட்டையில் (IRC) ஈடுபட்டுள்ளவர் ஒர் அரட்டைத் தடத்திலிருந்து இன்னொரு தடத்திற்கு அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது.

channel, information : தரவு தடம்.

channel, input/output : உள்ளீட்டு வெளியீட்டுத் தடம்.

channel mар : இணைப்பு அமைபடம் : மிடி (midi) இணைப்புச் செய்திகளுக்குச் சேரவேண்டிய இணைப்புகள், வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் ஒட்டு அமைபடங்களைக் குறிப்பிடுகிறது.

channel op : தட நிர்வாகி; தட மேலாளர்; தட இயக்குநர் : channel Opearator என்பதன் குறுக்கம். இணையத் தொடர் அரட்டையில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரட்டை உரையாடல்களை ஒருவர் மேற்பார்வை செய்து கொண்டிருப்பார். விரும்பத்தகாத அநாகரிகமான உரையாடலில் ஈடுபடுவோரை அரட்டைத் தடத்திலிருந்து நீக்கிவிட இவருக்கு அதிகாரம் உண்டு.

Channel, peripheral interface : புறச்சாதன இடைமுகத் தடம்.