பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

channel programme

239

character definition


channel programme : தட நிரல் : ஒரு அதிவேக வெளிப்புற செயல்பாட்டு ஆணைகளின் தொகுதி. உள்ளீட்டு/வெளியீட்டு இயக்கத்தைத் தொடக்கும் நிரலின் ஆணை. இணைப்பு நிரலைத் தனியாக இணைப்பு செயல்படுத்தும். அதேவேளையில் மற்ற இயக்கங்கள் கணினியால் செய்யப்படும்.

channel, read/write : படி/எழுது தடம்.

channels : தடங்கள், வழிகள்.

character : எழுத்து வகை; வரி வடிவம் : கணினி சாதனத்தில் சேமித்து, செயலாக்கப்படும் ஏதாவது ஒரு குறியீட்டெண், நிறுத்தக் குறியீடு அல்லது வெற்றிடம்.

character-at-a-time printers : ஒரு நேரத்தில் ஒரு எழுத்து அச்சுப் பொறிகள் : தொடர் அச்சுப் பொறிகள் என்று அழைக்கப்படும். ஒரு நேரத்தில் ஒரு எழுத்தினை மட்டுமே அச்சிடும் அச்சுப் பொறிகள்.

character based programme : எழுத்து சார் நிரல்.

character, binary code : இருமக் குறிமுறை எழுத்து.

character cell : எழுத்துக் கலம்; எழுத்துச் சிற்றறை : காட்சித் திரை அல்லது அச்சுப் பொறியில் ஒரு தனி எழுத்தை அமைக்கப் பயன்படும் புள்ளிகளின் அமைப்பு 8x16 எழுத்துச் கலங்களில் 16 கிடைவரிசைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் 8 புள்ளிகள். இப்புள்ளிகளின் இணைப்பின் மூலமே எழுத்து உருவாகிறது.

character checking : எழுத்துச் சரிப்பார்ப்பு : எல்லா எழுத்துகளையும் ஒரு குழு அல்லது புலமாகச் சோதித்து ஒவ்வொரு எழுத்தையும் சரிபார்த்தல்.

character code : எழுத்துக் குறிமுறை : எழுத்துத் தொகுதி ஒன்றைக் குறிப்பிடும் ஒரு எண் குறியீடு.

character data : எழுத்துத் தரவு : எழுத்து அல்லது எழுத்து எண்களால் ஆன விவரம்.

character definition table : எழுத்து வரையறை அட்டவணை : கணினித் திரையில் புள்ளிகளால் ஆன எழுத்துகளையும், துண்மிவரைவு எழுத்து வடிவங்களையும் காண்பிக்க அடிப்படையாக விளங்கும் தோரணிகள் (patterns) அடங்கிய அட்டவணை. கணினிகள்