பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chat mode

245

check digits


போது இணையத்தில் குரல் அரட்டை (Voice Chat) வசதியும் உள்ளது.

தேர்வுசெய் பெட்டி

chat mode : அரட்டைப் பாங்கு : தரவு தொடர்பு முறை பயன்படுத்துபவர்கள் இதில் செய்திகளை ஒருவருக்கொருவர் தட்டச்சு செய்து பெறலாம். ஒவ்வொரு விசையை அழுத்தியவுடன் அது அனுப்பப்பட்டு விடும்.

chat page : அரட்டைப் பக்கம்.

chat room : அரட்டை அரங்கம்.

cheapernet : மலிவுப்பிணையம்.

check : சரிபார்ப்பு.

check, arithmatic : கணக்கீட்டுச் சரி பார்ப்பு.

check bit : சரிப்பார்ப்பு பிட்; சரி பார்ப்புத் துண்மி : சமநிலைத் துண்மி போன்ற‌ இரும எண் சோதனை இலக்கம்.

check box : தேர்வு செய் பெட்டி : ஆம் அல்லது இல்லை என்னும் பதிலைப் பயனாளரிடமிருந்து பெறப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய சதுரப் பெட்டி. சிறிய பெட்டியில் எக்ஸ் அல்லது டிக் குறியீடு போட்டால் அதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை உணர்த்தும்.

check character : சரிபார்ப்பு எழுத்து : ஒரு தரவு தொகுதியின் இறுதியில் சேர்க்கப்படும் எழுத்து. சோதனை செய்யப்படும்போது இதைப் பயன்படுத்துகிறோம்.

check digits : சரிபார்ப்பு இலக்கங்கள் : எண் வடிவ தரவு தொகுதியை அனுப்பும்போது அதனுடன் சேர்க்கப்படும்