பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

check spelling

247

chief programmer team


check spelling : எழுத்துப் பிழையறி.

check sum : சரிபார்ப்புக் கூட்டுத்தொகை : சோதனைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற துண்மிகள் அல்லது எண்களின் கூட்டுத் தொகை. தானாக ஏற்படுத்தப்படும் விதிகளின்படி கூட்டல் நடைபெறுகிறது. தரவு சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கப் பயன்படுகிறது.

check, validity : செல்லுபடிச் சரிபார்ப்பு.

chemical collissions : வேதி மோதல்கள் : பிபிசி அக்கார்ன் அல்லது இந்திய எஸ். சி. எல் யூனிக்கார்ன்-க்கான ஒரு கல்வி மென்பொருள். வரைகலை முறையில் வேதி கலவைகளில் ஏற்படும் எதிர் வினைகளின் பல்வேறு தன்மைகளை இது கூறும்.

chicken-and-egg-loop : கோழியா முட்டையா மடக்கு.

chicklet keyboard : சுண்டு விசைப்பலகை : விரைவாகத் தட்டச்சு செய்யமுடியாத அளவில் சிறிய, சதுர விசைகள் உள்ள விசைப்பலகை.

chief information officer : தலைமை தரவு அலுவலர் : நீண்ட கால தரவு திட்டமிடல் மற்றும் உத்தியில் கவனம் செலுத்தி ஒரு நிறுவனத்தின் தரவு தொழில் நுட்பப் பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் ஒரு மூத்த நிர்வாகப் பதவி.

chief programmer : தலைமை நிரலர் : ஒரு நிரலர் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர். திட்டம் முழுவதும் வெற்றிகரமாக முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முழுப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர்.

chief programmer team : தலைமை நிரலர் குழு : கணினி நிரலாக்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை நிரலர், ஒரு மாற்று நிரலர், ஒரு நிரலர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழில்நுட்ப நிரலர் ஏற்றிருப்பார். தேவைப்பட்டால், இரண்டு அல்லது மூன்று கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்படலாம் அல்லது வல்லுநர்கள் ஆலோசனை பெறலாம். நிரலர் எழுதுவதை ஒரு தனியார் கலையாகக் கருதாமல் அதை ஒரு பொறியியல் தொழிலாக மாற்றுவதும், திறமைமிக்க படைப்பாளி தன் படைப்புத் திறனில் கவனம் செலுத்தி ஊக்கம் அளிப்பதும் இதில் முக்கிய கோட்பாடுகளாகும்.