பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

child process

248

chip carrier


child process : துணைச் செயலாக்கம் : ஒரு கணினி செயலாக்கத்தின் கட்டுப்பாட்டில் இன்னொரு செயலாக்கத்தைத் தொடங்குதல். ஒரு நிரலின் கட்டுப்பாட்டில் இன்னொரு நிரலை இயக்குதல்.

child programme : துணைநிலை நிரல் : ஒரு நிரலின் உள்ளேயே இயக்கப்பட்டு, அதன் இயக்கம் தீர்ந்தவுடன் தனியாக செயல்படும் ஒரு நிரல். முதன்மை நிரலினால் அழைக்கப்பட்டு நினைவகத்தில் ஏற்றப்படும் இரண்டாம் நிலை அல்லது துணைநிலை நிரல்.

child record : சேய்ஏடு; கீழ் நிலை ஏடு : வரிசைக்கிரம தரவுகள் அமைப்பில் இரண்டு அடுத்தடுத்த நிலையிலுள்ள பதிவேடுகளில் கீழ்நிலை ஏடு. ஏற்கெனவே இருக்கும் பெற்றோர் ஏடு ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பதிவேடுகளின் உள்ளடக்கங்களைச் சார்ந்து உருவாக்கப்படும் தரவு பதிவேடு.

chimes of doom : சாவு மணி; இறுதி மணியோசை : மெக்கின்டோஷ் கணினிகளில், மிகமோசமான பழுது ஏற்பட்டு செயல்படாத நிலையேற்படும்போது தொடர்ந்து மணியொலிக்கும்.

சில்லு (அ) சிப்பு

chip : சில்லு; சிப்பு : சிப்பு ஏராளமான மின்னணுச் சுற்றுகளைக் கொண்டுள்ள ஒரு சிறிய சாதனம். ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் வடிவத்தில் மின்னணு பாகங்கள் மெல்லிய சிலிக்கான் தகட்டின்மீது வைக்கப்படுகின்றன. கணினியை உருவாக்குபவை சிப்புகளே. கணக்கிடல், நினைவகம், கட்டுப்பாடு போன்ற பல்வேறு பணிகளை அவை செய்கின்றன.

chipcard : சிப்பு அட்டை; சில்லு அட்டை.

chip carrier : சிப்பு சுமப்பி : சிப்பு செய்வதற்கு ஈயம் போன்ற உலோகத்தில் அதன் அச்சை ஏற்றுதல். எல்லா திசைகளிலும் இணைப்பிகள் உள்ள சிப்புப் பொதிவுகள்.