பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chip family

249

chunking


chip family : சிப்புக் குடும்பம் : தொடர்புடைய சிப்புகளின் குழு. முதலாவது சிப்புவிலிருந்து ஒவ்வொரு சிப்பும் உருவாக்கப்படுகிறது.

chipper : சிப்பாக்கி; சில்லு ஆக்கி.

chips : சிப்புகள்; சில்லுகள்.

chip select : சிப்புத் தேர்வு : சிப்புப் பெட்டியிலிருந்து வெளியே வரும் முனை. சிப்புவிற்கோ அல்லது சிப்புவிலிருந்தோ தரவுகளை எழுதுவதையும், படிப்பதையும் இது செயலற்றதாக்கும்.

chip set : சிப்புத் தொகுதி : ஒரு பணியைச் செய்வதற்காக சேர்ந்து இயங்க வடிவமைக்கப்பட்டுள்ள சிப்புகளின் குழு.

chip, silicon : சிலிக்கான் சிப்பு; சிலிக்கான் சில்லு.

choice : தேர்வு : ஒரு டாஸ் (DOS) கட்டளை. அது பயனாளர் விசையழுத்தக் காத்திருக்கிறது. ஆணையின் உள்ளேயே ஏற்றுக் கொள்கிற விசைகளின் பட்டியல் குறிப்பிடப்படுகிறது.

choose : தேர்ந்தெடு : சாளரத்தில் ஒரு செயலைச் செய்வதற்குச் சுட்டி அல்லது விசைப் பலகையை தேர்ந்தெடுப்பது. பட்டியலில் உள்ளபடி கட்டளைகளைத் தேர்ந்தெடுத்து பணிகள் செய்யப்படுகின்றன. பயன்பாடுகளை இயக்க 'ஐக்கான்' (icons) களைத் தேர்ந்தெடுக்கலாம்.

chooser : தேர்பவர் : மெக்கின்டோஷ் மேசை துணைப்பொருள், அச்சுப்பொறி, ஃபைல் சர்வர் அல்லது கட்டமைப்பு மோடம் போன்றவற்றை தேர்ந்தெடுக்க அனுமதிப்பது.

chop : நீக்கு; வெட்டு : தேவைப்படாத தரவுவை வெளியேற்றுதல்.

chorus : குழு ஒலி.

chroma : நிறமி : வண்ணங்களை ஏற்படுத்த உதவும் நீர்மம், நிழல், சாயல் போன்றவை.

chromaticity : நிறப்பொலிமை : வண்ணத்தின் தூய்மை மற்றும் மீதுான்றும் அலைநீளம் இவற்றை அளக்க முடியும் என்பதுடன் பிரகாசம் எவ்வளவாயினும் அதன் நீர்மை மற்றும் சாயலுக்கு ஏற்றதாக அமையும்.

chrominnance : நிறப்பொலிவு : வண்ணத்தைக் கட்டுப்படுத்தும் ஒளிக்காட்சி சமிக்கையின் பகுதிகள்.

chunking : தொகுத்தல் : இரும எண் முகவரிகளை பதினறும இலக்கத்துக்கு மாற்றும் முறை. 0011 1100 என்ற இரும எண்ணை