பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

circuit analyzer

251

Circuit Data Services


மின்சுற்று அட்டை

களைக் கட்டுப்பாடான முறையில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதை 2. மின் சக்தி செல்லக்கூடிய கடத்திகள் மற்றும் அது தொடர்பான மின்சாதனங்களின் அமைப்பு 3. இரண்டு அல்லது கூடுதல் இடங்களிடையே ஏற்படும் தரவு தொடர்பு இணைப்பு.

circuit analyzer : மின்சுற்று பகுப்பாய்வி : ஒரு மின்னணு மின்சுற்று செல்லத்தக்கதா என்று சோதித்துக் கூறும் சாதனம்.

circuit, AND : உம்மை மின்சுற்று.

circuit board : மின்சுற்று அட்டை : தொடர்ச்சியான நுண் சிப்புகளையும், பல்வேறு மின்னணுச் சாதனங்களையும் ஏற்றிப் பொருத்தக்கூடிய அட்டை. அட்டையின் மேற்பரப்பில் மின்சுற்று அமைப்புகள் அச்சிடப்படுகின்றன. printed circuit board என்றும் அழைக்கப்படுகிறது.

circuit breaker : மின்சுற்று துண்டிப்பி : அதிக மின்னோட்டம் ஏற்படுவதை உணர்ந்து மின்சுற்றைத் துண்டிக்கும் பாதுகாப்புச் சாதனம். ஃப்யூஸ் போல் அல்லாது, இதை மீண்டும் சரி செய்ய முடியும்.

circuit capacity : மின்சுற்றுக் கொள்திறன் : ஒரே நேரத்தில் ஒரு மின்சுற்று கையாளக் கூடிய வழித் தடங்களின் எண்ணிக்கை.

circuit card : மின்சுற்று அட்டை.

circuit, control : கட்டுப்பாட்டு மின்சுற்று.

Circuit Data Services : மின்சுற்று தரவு சேவைகள் : மின்சுற்று தொடர்பிணைப்புத் தொழில்நுட்ப அடிப்படையில்,