பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

classify

255

Claud P. Shannon


classify : வகைப்படுத்து : தரவுகளை வகை வாரியாகப் பிரித்தல் அல்லது ஒத்த தன்மைகளை உடையனவற்றை ஒரே வகையில் சேர்த்தல்.

classless interdomain routing : பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல் : இணையத்தில் உயர்நிலை திசை செலுத்து அட்டவணைகளின் உருவளவைச் சிறிதாக்க, ஒருங்கிணைப்புச் செயல் தந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு முகவரி அமைப்பு முறை. முதன்மை திசைவிகள் (Routers) ஏந்திச் செல்லும் தரவுகளின் அளவைக் குறைக்கும் பொருட்டு, பல்வேறு திசை வழிகள் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தத் திட்ட முறை செயல்பட இதனை ஏற்றுக் கொள்ளும் திசைவித்தல் நெறிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லை நுழை வாயில் நெறிமுறை (Border Gate way Protocol-BGP) யின் பதிப்பு 4 மற்றும் ஆர்ஐபீயின் பதிப்பு 2 (RIPV-2) இவற்றுள் சில. இத்திட்டமுறையின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் CIDR ஆகும்.

'class library : இனக்குழு நூலகம் : மூன்றாம் நபர்கள் கொடுக்கின்ற பொருள் நோக்கு நிரலாக்கத்துக்கான இனக்குழுக்களின் தொகுப்பு.

class methods : வகுப்பு வழிமுறைகள்; இனக்குழு வழிமுறைகள்.

class module : வகுப்பு கூறு; இனக்குழு கூறு.

class path : வகுப்புப் பாதை; இனக்குழுப் பாதை : ஜாவா மொழியில் நூலக இனக் குழுக்களைச் சேமித்து வைத்துள்ள கோப்பகத்தைக் குறிக்கும்.

class structure : இனக்குழு கட்டமைப்பு : ஒரு அமைப்பின் வரிசை முறை. செங்குத்துக்கோடுகள் இக்குழுக்களையும், ஆரங்கள் இனக்குழுக்களுக்குள் உள்ள உறவு முறைகளையும் காட்டும் வரைபடம். இனக்குழு வரைபடத் தொகுதியின் மூலம் ஒரு கணினி அமைப்பின் வகுப்பு வரைபடத்தைக் குறிப்பிடலாம்.

class variable : இனக்குழு மாறி : ஓர் இனக்குழுவின் பண்பு கூறுகள் ஒரு இனக்குழுவின் மாறிகள் கூட்டாக அதன் வடிவமைப்பை உண்டாக்குகின்றன. ஓர் இனக்குழுவில் உருவாக்கப்படும் அனைத்து இனப்பொருள்களுக்கும் இனக் குழு மாறி பொதுப்பண்பாக விளங்குகிறது.

Claud P. Shannon : கிளாட் பி. ஷானான் : அமெரிக்காவின் எம்ஐடியில் படித்த பட்டதாரி மாணவன். இணைப்பாக்க