பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clock pulse

262

close


சமிக்கையைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுவது.

clock pulse : கடிகாரத் துடிப்பு; மின்துடிப்பு அதிர்வு : இலக்க முறை சாதனத்தின் செயல்பாடுகளோடு ஒத்தியங்கச் செய்வதற்காக படிக ஊசலினால் ஒரு கால ஒழுங்கில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுத் துடிப்பு.

clock pulse circuit : கடிகாரத் துடிப்பு மின்சுற்று : ஒரே நேரத்தில் செயல்களை ஆற்றும் இலக்கமுறை கணினியில் இயக்கங்களுக்கு உதவுவதற்காக சரியான இடைவெளியில் நேரத் துடிப்புகளை உருவாக்கும் மின்சுற்று.

clock rate : துடிப்பு வீதம் : ஒரு கடிகாரத்திலிருந்து துடிப்புகள் வெளியிடப்படும் நேர வீதம்.

clock signal generator : கடிகாரச் சமிக்கை இயற்றி.

clock speed : கடிகார வேகம் : கணினியின் உட்பகுதி இதயத் துடிப்பு வேகம். ஒரு குவார்ட்ஸ் படிகத்தில் உருவாக்கப்படும் நிலையான அசைவுகளை கடிகார மின்சுற்று பயன்படுத்திக் கொண்டு மையச் செயலகத்திற்கு தொடர் துடிப்புகளை அனுப்புகிறது. வேகமான கடிகாரத் துடிப்பு உள்செயலாக்கத்தை வேகப்படுத்தும். சான்றாக, ஒரே செயலகம் 20 மெகா ஹெர்ட்சில் ஒடும்போது 10 மெகா ஹெர்ட்சில் ஒடுவதை விட இரண்டு பங்கு வேகமாகச் செயல்படும்.

clock timer : நேரங்காட்டி; காலங்காட்டி கடிகாரம்.

clock track : கடிகாரத் தடம் : காலத்தைக் குறிப்பதற்கான சமிக்கைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிற பாதை.

clockwise : வலச்சுற்று : இடது புறத்திலிருந்து வலதுபுறத்திற்கு நக‌ர்தல.

clone : வார்ப்பு நகலி : ஒன்றின் நகல் அல்லது சரியான பிரதியாக இருக்கும் ஒரு பொருள் அல்லது கருத்து. உயிரியலுக்கு அப்பாற்பட்டு இவ்வாறு பொதுவாகக் கூறலாம்.

close : மூடு : பெரும்பாலான கணினி மொழிகளில் முன்பே திறந்த கோப்பை மூடுவதற்கான கட்டளை. செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது வெளியேறி எல்லா திறந்த கோப்புகளையும் மூடுவதற்குப் பல மென்பொருள் பயன்பாடுகளில் உள்ள ஒரு கட்டளை. ஒரு கோப்பை சரிவர மூடத் தவறினால் தரவு சிதைந்தோ அல்லது தொலைந்தோ போகலாம்.