பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

close box

263

cloth ribbon


close box : மூடு பெட்டி : மெக்கின்டோஷ் வரைகலை முறை பயன்படு இடைமுகப்பில் சாளரத் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் உள்ள சிறுபெட்டி. பெட்டியின் மீது சொடுக்கினால் சாளரம் மூடப்பட்டுவிடும்.

close button : மூடு பொத்தான் : விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் தோன்றும் சாளரங்களில் தலைப்புப் பட்டையில் வலது மூலையில் உள்ள x குறியிட்ட ஒரு சதுரப் பொத்தான். விண்டோஸ் 3. x பணித்தளத்தில் இப்பொத்தான் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் இருக்கும். பொத்தானில் சொடுக்கினால் பலகணி மூடப்படும்.

closed architecture : மூடிய‌ கட்டுமானம் : கணினியில் கட்டுமான அமைப்பு அதன் தொழில்நுட்ப புள்ளி விவரங்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது.

closed file : மூடப்பட்ட கோப்பு : படிக்கவோ, எழுதவோ அணுக முடியாத கோப்பு.

closed frame : மூடிய சட்டம்.

closed loop : மூடிய மடக்கி பாதை : முழுமையான வட்டமைப்பிலுள்ள மாற்றுப் பாதை.

closed routine : மூடிய நிரல் கூறு; மூடிய துணை நிரல்.

closed shop : மூடிய அங்காடி : தரவு செயலாக்க மையத்தை தொழில் முறையில் இயக்குபவர்களை மட்டும் கொண்டு இயக்குவது. நிரல்களையும் தரவுகளையும் ஏவலாளர்கள் கொண்டு வருவார்கள் அல்லது தொலைபேசிக் கம்பிகளின் வழியாக அனுப்புவார்கள். இதன் மூலம் கணினி அறைக்குள் பயனாளர்கள் மிகவும் திறமையாக செயல்பட முடிகிறது.

closed subroutine : மூடிய துணை நிரல்கூறு : அழைக்கும் செயல்முறைகள் ஒன்று அல்லது பலவற்றுடன் இணைக்கப்பட்டு ஒரிடத்தில் வைக்கப்பட்டுள்ள துணைச் செயல்முறை.

closed system : மூடிய அமைப்பு : அந்நிய முனையங்கள் அல்லது சாதனங்களுடன் இணைவதை ஏற்றுக்கொள்ளாத கணினி அமைப்பு.

close statement : மூடு ஆணை; மூடு கூற்று.

closeup : அணுக்கக் காட்சி; நெருக்கக் காட்சி.

closing files : மூடிய கோப்புகள்.

cloth ribbon : துணி நாடா : தொடுநிலை அச்சுப்பொறி தட்டச்சுப் பொறி ஆகியவற்றில்