பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CMOS RAM

265

CΜΥ


பொருள்படும் Complementary Metal Oxide Semiconductor என்பதன் குறும்பெயர்.

CMOS RAM : சீமாஸ் ரேம் : நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல், சீமாஸ் சிப்புகள் மிகமிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரைச்சலைத்தாங்க வல்லவை. இம்மாதிரியான சிப்புகள் மின் கலங்கள் அளிக்கும் மின்சாரத்தில் செயல்படும் வன்பொருள் பாகங்களில் மிகுந்த பயனுள்ளவையாய் இருக்கின்றன. நுண்கணினிக் கடிகாரங்கள், செயல்முறையில் அமைப்பில் இருந்துவரும் சில வகை அழித்தெழுது அட்டைகள் போன்ற வன்பொருள்களில் பயனுள்ளவையாய் உள்ளன.

CMOS setup : சீமாஸ் அமைவு : தேதி, நேரம் போன்று சில குறிப்பிட்ட விருப்பத் தேர்வுகளை அமைத்துக் கொள்ள, இயக்க நேரத்தில் அணுகக்கூடிய பயன்பாடுமிக்க அமைப்பு.

CMU : சிஎம்யு : கார்னஜி மெலான் பல்கலைக்கழகம் எனப் பொருள்படும் Carnegie Mellon University என்பதன் குறும்பெயர். இந்நிறுவனம் ஒரு எந்திரன் (எந்திர மனிதன்) ஆராய்ச்சி மையமாகவும், ஒரு முக்கிய கணினி மையமாகவும் செயல்படுகிறது.

CMY : சிஎம்ஒய் : CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (மஞ்சள்) என்ற சொற்களின் முதல் எழுத்துக்களான சொல். ஒளியை உட்கிரகித்து உருவாக்கப்படும் வண்ணங்களை வருணிப்பதற்கான ஒரு மாதிரி. தாளின்மீது படும் மை போன்றது. ஒளியை நீக்கும் வகையிலான கணித்திரை ஒளிக் காட்சி போன்றது அன்று. கண்னிலுள்ள மூவகை கூம்புவடிவ செல்கள் மயில்நீலம், செந்நீலம், மஞ்சள் நிறங்களால் முறையே உட்கிரகிக்கப்படும் அதாவது (வெண்மை நிறத்திலிருந்து பிரிந்து வரும்) சிவப்பு, பச்சை, நீல நிறங்களை உணர்கின்றன. ஒளியை வடிகட்டும் இந்த அடிப்படை நிறங்களிலுள்ள வண்ணப் பொருளின் விழுக்காடு கலந்து விரும்பிய நிறத்தைக் கொண்டு வரலாம். எந்த வண்ணப் பொருளும் இல்லாதிருந்தாலும் வெண்மையில் எந்த மாற்றமும் இராது. இந்த வண்ணப்பொருள்கள் எல்லாவற்றையும் நூறு விழுக்காடு சேர்த்தால் வெண்மை கருமை ஆகிவிடும்.