பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Code

267

coded number


அமெரிக்க மைய அரசு ஏற்படுத்திய தொழில் துறை கமிட்டி. கணினித் துறையில் தர நிர்ணயங்களை உருவாக்கிட அமைக்கப்பட்ட இக்குழுவின் மூலம்தான் கோபால் மொழியும் சிக்கலான தரவு தளங்கள் பலவும் உருவாயின.

Code : குறிமுறை : 1. தரவுகளை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதை விளக்கும் விதிகளின் தொகுதி. 2. தரவுகளை ஒரு குறியீட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுவதற்கான விதிகள். 3. ஒரு நிரல் அல்லது செயல் முறையை எழுதுவது, குறியீடு அமைத்தல் போன்றது.

code, absolute : முற்றுக் குறி முறை; நேரடிக் குறிமுறை.

code, alphabetic : அகரவரிசைக் குறி முறை; எழுத்துக் கோவை குறி முறை.

code, alphanumeric : எழுத்தெண் குறிமுறை.

code, binary : இருமக் குறி முறை.

codec : கோடெக் : codes, decoder என்ற இருசொற்களின் கூட்டுச் சொல்.

code conversion : குறிமுறை மாற்றல் : ஒரு குறியீட்டிலிருந்து எழுத்துகள், துண்மி தொகுதிகளை அதே பொருளுள்ள எழுத்துகளைக் கொண்ட வேறு ஒரு குறியீட்டுக்கு மாற்றுதல்.

coded decimal number : குறி முறைப் பதின்ம எண்.

coded decimal representation, binary : இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு.

coded digit, binary : இருமக் குறிமுறை இலக்கம்.

Code, Division Multiple Access : பகுதி பன்முக அணுகல்குறி முறை : பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கியும் அறியும். அதனால் பெற்ற சமிக்கையை குறியீடு ஆக்க முடியும். ஒவ்வொரு தொடர்பிலா வரிசை முறையும் வெவ்வேறு தரவு தொடர்பு தடத்தை ஒத்தது. இலக்கமுறை செல்பேசிக்காக மோட்டாரோலா இந்த ஒன்று சேர்ப்பு வகையைப் பயன்படுத்துகிறது.

coded number : குறியிடப்பட்ட‌ எண் : ஒரு பொருளின் பதிவேட்டு எண். ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட கணினி