பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coded octal binary

268

code set


அமைப்பிற்கு ஏற்றாற் போல் இதனை அமைக்கலாம் அல்லது குறியிடலாம். எடையிட்ட சோதனை இலக்க முறைகள் அல்லது சோதனை இலக்கங்களின் மூலம் குறியிடப்பட்ட எண்கள் செல்லத்தக்கவையா என்று சோதிக்கலாம்.

coded octal binary : இரும குறி முறை எண்மம்.

code editor : குறிமுறை தொகுப்பி.

code error : பிழைக் குறிமுறை.

code generator : குறியீடு உருவாக்கி.

code in binary : இருமக் குறிமுறை.

code level : குறிமுறை நிலை : ஒரு குறிப்பிட்ட எழுத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் துண்மிகள்.

code, machine : எந்திரக் குறிமுறை.

code number : குறியீட்டெண்.

code, optimization : குறிமுறைச் சரித்திறனாக்கம்.

code page : குறிமுறைப் பக்கம் : டாஸ் (DOS) 3. 3 மற்றும் அதன் பின் வந்த பதிப்புகளில் வருவது. பல்வேறு அந்நிய மொழி எழுத்துகளுக்கான விசைப் பலகைகளை அமைக்க உதவும் பட்டியல்.

coder : குறிமுறையாளர் : கணினி மொழியில் ஒரு சிக்கலையோ அல்லது சிக்கலின் ஒரு பகுதியையோ எடுத்துரைப்பவர். பிறரது வடிவமைப்பையே எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு தானாக எந்த உழைப்பையும் செய்யாத ஒரு கணினி நிரலரை ஏளனமாகக் குறிப்பிடவும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

coder-decoder (codec) : குறியாக்கி-குறிவிலக்கி (கோடெக்) : தரவு தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு தனிச் சிப்பு. தொடர்முறைத் தரவுவை இலக்க முறையாகவும் இலக்க முறையை தொடர் முறையாகவும் மாற்ற இவை பயன்படுகின்றன.

code, relocatable : மறுஇட‌ அமைவுக் குறிமுறை.

code segment : குறிமுறைப் பகுதி : அடையாள மதிப்புடைய நினைவகத்தின் பகுதியைக் குறிப்பிடுகிறது. ஒரு நிரலின் கட்டளைக்கு ஏற்பட்டுள்ள பயன்படுத்தும் நினைவகத்தின் பகுதி.

code set : குறிமுறைத் தொகுதி : ஒரு குறிமுறை வரையறுத்துக் கொடுக்கும் பதிலிகளின் முழுத் தொகுதி. ஒரு தொலைபேசி எண்ணில் (625 8485) முதல் மூன்று எண்கள் (ஆறு இலக்க