பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

code snippet

269

coercion


எண்ணாயின் முதல் இரண்டு எண்கள்), குறிப்பிட்ட தொலைபேசி நிலையத்தைக் குறிக்கும் குறிமுறைத் தொகுதி ஆகும்.

code snippet : குறியீட்டுச் சிறு பகுதி : 1. வரைகலைப் பயன்பாட்டில் இடைமுகம் ஒன்றில் பயனாளர், பட்டியில் விருப்பத் தேர்வு செய்யும்போது அல்லது பொத்தானை அழுத்தும்போது என்ன நிகழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சிறிய நிரல் பகுதி, 2. பெரிய செயல்முறைத் திட்டத்தின் பகுதியாக உள்ள செயல்முறை நிரலில் சிறுதுண்டு. அச்சிறுபகுதி குறிப்பிட்ட வேலை அல்லது பணியை நிறைவேற்றும்.

code, source : ஆதாரக் குறி முறை; மூலக் குறிமுறை; மூல வரைவு.

code system : குறியீட்டு முறைமை.

code view : கோட்வியூ; (குறிமுறைப் பார்வை) : மைக்ரோ சாஃப்ட் (Microsoft) மற்றும் ஏற்புடைய மொழி மாற்றிகளுக்கு எழுதப்பட்ட நிரல்களுக்கான பிழை நீக்கி. பிற நவீன பிழை நீக்கிகளைப்போல, மூல மற்றும் இலக்கு நிரல்களை இது இணைக்கிறது. நிரல் இயக்கப் படும்போது மூலக்குறி முறையின் வழியாக நிரலர் செல்ல இது வழி வகுக்கிறது.

coding : குறிமுறையாக்கம் : 1. குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான ஆணைகளின் பட்டியலை எழுதுவது.

coding, absolute : முற்றுக் குறி முறையாக்கம்.

coding, automatic : தானியங்கு குறிமுறையாக்கம்.

coding basics : குறிமுறை அடிப்படைகள்.

coding, direct : நேரடிக் குறிமுறையாக்கம்.

coding form : குறிமுறை வடிவம் : ஒரு கணினிக்கு நிரல் அமைப்பதற்கான ஆணைகள் எழுதும் வடிவம். ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட குறிமுறை வடிவம் உண்டு. குறிமுறைத் தாள் என்றும் அழைக்கப்படும்.

coding sheet : குறிமுறையாக்கத் தாள்.

co-efficient : குணகம்.

coercion : வலிந்த மாற்றம்; கட்டாயப்படுத்தல் : நிரலாக்க மொழி வெளிப்பாடுகளில், ஒருவகை தகவலிலிருந்து வேறொன்றுக்குத் தானாகவே மாற்றிக் கொள்ளுதல்.