பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cognitive styles

270

cold start


cognitive styles : புலப்பாட்டு பாணிகள் : பிரச்சினைகளை எதிர்கொண்டு மக்கள் தகவலை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதன் அடிப்படை அமைப்புகள்.

cognitive theory : புலப்பாட்டுக் கொள்கை : பிரச்சினைகளை எதிர்கொண்டு தகவலை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதற்கான கொள்கைகள்.

COGO : கோகோ : ஆயத்தொலைவடிவக் கணிதம் எனப்படும் Coordinate Geometry, என்பதன் குறும்பெயர். வடிவக் கணக்கு (Geometry) சிக்கல்களைத் தீர்க்க உதவும் ஒரு நிரலாக்க மொழி. சிவில் பொறியாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது.

coherence : தொடர் இசைவு : ராஸ்டர் வரைகலைக் காட்சி தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் மதிப்பே அதனை அடுத்து வரும் படப்புள்ளியிலும் இருக்கும் என்ற அனுமானம்.

cohesion : இணைவு : ஒரு பொதுவான பணியை ஒரு கூறு (மாடுல்) எவ்வாறு செய்கிறது என்பதற்கான அளவு. ஒரு நிரலின் உள் பலத்தின் அளவு.

coincidence error : தற்செயலான பிழை : பல ஒருங்கிணைப்பிகளை (integrators) இணைக்கும்போது கால வேறுபாட்டில் ஏற்படும் பிழை.

cold boot : தொடக்க இயக்கம் : புதிதாகக் கணினியைத் இயக்கி அதில் இயக்க முறைமையை ஏற்றும் செயல்.

cold fault : உடன் தெரியும் பிழை : கணினி எந்திரத்தைத் இயக்கிய உடனே தெரிகின்ற பிழை.

cold link : குளிர் தொடுப்பு : புதுத் தெடுப்பு : தரவு வேண்டுமென்று கேட்டதன் மேல் உண்டாக்கப்படும் இணைப்பு. அந்த வேண்டுகோள் நிறைவேறியவுடன் இணைப்பு துண்டிக்கப் பெறும். அடுத்த முறை கிளையன் வழங்கனிடம் மீண்டும் தரவு வேண்டுமெனக் கேட்டால் மீண்டும் இணைப்பு நிறுவப்பட வேண்டும். பரிமாற நிறைய தரவுகள் கொண்டிருந்தால், கிளையன்/ வழங்கன் கட்டமைப்பில் குளிர் இணைப்புகள் பயனுள்ளவை. மைக்ரோசாப்ட் எக்செல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இயங்கு நிலை தரவு பரிமாற்றம் குளிர் இணைப்புகளைப் பயன்படுத்துகிறது.

cold restart : புது மறுதொடக்கம்.

cold start : புதிய தொடக்கம் : ஒரு அமைப்பில் பெரும் தவறு