பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

collation sequence

272

colour


collation sequence : சேர்க்கும் வரிசை : தொடக்கம் முதல் கடைசிவரை பொருள்களை வரிசைப்படுத்தும்போது கணினி பயன்படுத்தும் வரிசை முறை. எழுத்துகளுக்கு அகர வரிசையும், எண்களுக்கு எண்வரிசையுமாக இந்த வரிசைமுறை பொது அமையும். பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண் எழுத்துக் கலப்பு, நிறுத்தக் குறியீடுகள் போன்றவை இதில் இணையும்போது வரிசைமுறை சிக்கலாகிவிடுகிறது.

collator : சேர்ப்பி : அட்டைகள் அல்லது பிற ஆவணங்களின் தொகுதிகளை ஒரே வரிசையில் சேர்த்துத் தரும் எந்திரம்.

collection : திரட்டு; தொகுப்பு : பல்வேறு இடங்களிலிருந்து தரவுகளைப் பெற்று அவற்றை ஒரே இடத்தில் தொகுப்பது.

collection, data : தரவு சேகரிப்பு; தரவுத் திட்டம்.

collector : சேகரிப்பி; திரட்டி.

collision : மோதல் : இரண்டு விசைப்பலகை இயக்கங்கள் ஒரே நேரத்தில் ஆணையிடப்படும்போது ஒரே முகவரியில் விசைகள் மோதிக்கொள்வதன் விளைவு. கணினியின் இயக்க முறையில் எந்த இயக்கத்தை செயல்படுத்துவது என்று நிரலில் குறிப்பிடப்படும்.

collision detection : மோதலைக் கண்டுபிடித்தல்; மோதல் உணர்தல் : 1. கணினி வரைபடமுறைகளில் குறிப்பாக, ஆர்க்கேட் வகை விளையாட்டுகளில், இரண்டு பொருள்கள் எப்போது மோதிக் கொள்ளும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மோதலைக் கண்டுபிடிப்பதற்குப் பல்வேறு நிரல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். 2. பல்முனை அணுகு கட்டமைப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணினிகள் தரவு அனுப்புவதைத் தடை செய்யும் நுட்பம்.

colmar : கோல்மார் : நமக்குக் கிடைத்துள்ள முதல் எந்திரக் கணிப்பியான அரித்மோ மீட்டரின் வேறு பெயர்.

colossus : கொலாசஸ் : ஜெர்மானிய குறியீடுகளைப் பிரித்தறிய 1943இல் உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கக் கணினி.

colour : வண்ணம்; நிறம் : அலைவரிசை பொறுத்து மனிதர்கட்புலனால் காணத்தக்க ஒளியின் ஒரு பண்பு நிறம் என இயற்பியல் குறிப்பிடுகிறது. உயர் அலைவரிசை உடைய வயலெட் நிறத்திலிருந்து குறை அலை