பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Colour coding

274

colour look-up table


பிடும் 0 முதல் 15 வரையுள்ள எண்களில் ஒன்று. ஐபிஎம் கூடுதல் திறனுடைய நிற முகப்புடன் சேர்க்கப்பட்ட இஜிஏ வில் 64 நிறக்குறியீடுகள் (0-63) இருக்கும்.

colour coding : நிறம் குறியிடல் : பல்வகையான பதிவேடுகளைப் பயன்படுத்தி நிறங்களை அடையாளம் காணும் செயல்முறை.

colour contrast : வண்ண மாறுபாடு; நிற வேறுபாடு.

colour cycling : நிற சுழற்சியாக்கம் : கணினி வரைகலைகளில், பொருள்களை நகர்த்துவதற்குப் பதிலாக, தொடர்ச்சியாக நிறங்களை மாற்றுவதன் மூலம் அசைவூட்டப் படத் தினைப்போல் அமைக்கும் தொழில் நுட்பம்.

colour enrichment : நிறச் செறிவு.

colour genie (EACA) : கலர் ஜீனி : 8Z - 80செயலகம் சார்ந்த நுண் கணினி 16K குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM) டையது. 32Κ வரை விரிவாக்கிக் கொள்ளலாம்.

colour graphics : வண்ண வரைகலை : நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைதல், வரைபடங்களை உருவாக்குதல் போன்றவற்றைச் செய்யும் கணினி அமைப்பு.

Colour Graphics Adapter : நிற வரை கலைத் தகவி.

colour inkjet printer : வண்ண மையச்சுப் பொறி.

colour keying : வண்ண விசை அமைத்தல் : ஒரு ஒளிக்காட்சி (வீடியோ) தோற்றத்தை ஒன்றன் மீது ஒன்றாக மேலே அழுத்தும் தொழில் நுட்பம். சான்றாக, கடலில் ஒரு காரை மிதக்க விட வேண்டுமென்றால், நீல நிறப் பின்னணியில் காரின் தோற்றத்தை வைப்பது. கார் மற்றும் கடலின் உருவத்தை ஒன்றாக வருடிக் காரைக் கடலில் மிதப்பதுபோல் செய்தல்.

colour laser printer : வண்ண லேசர் அச்சுப்பொறி.

colour look-up table : நிற நோக்கு அட்டவணை : கணினியின் ஒளிக்காட்சி தகவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அட்டவணை. கணினியின் காட்சித்திரையில் காட்டக்கூடிய வெவ்வேறு வண்ணங்களுக்கு நேரிணையான நிறக்குறியீட்டு நிலை எண்களைக் கொண்டது அப்பட்டியல். மறைமுகமாக வண்ணம் காட்டப்படும்போது, நிறத் துண்மிகள் ஒரு சிறிதளவு ஒவ்வொரு படக் கூறுக்காக சேமித்து வைக்கப்பட்டு, நிறத்திற்காகப் பார்க்கவேண்டிய