பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colour management

275

colour mode property


பட்டியலிலிருந்து குறியீட்டு நிலை எண்களின் ஒரு தொகுதியைத் தெரிந்தெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

colour management : நிற மேலாண்மை : அச்சுத்துறையில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒரு சீரான வண்ணம் உண்டாக்கும் முறை. நுண்ணாய்வுக் கருவி, ஒளிப் படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித்திரை எதிலுமிருந்து ஆர்ஜிபி உள்ளிட்டினைத் துல்லியமாக அச்சிடு கருவி, அச்சிடு கருவிக்கான அளவுக் கோட்டுச் சாதனம் அல்லது உருவம் திரும்பவும் கொணருவதற்கான வேறு வெளிப்பாட்டு சாதனம் ஆகியவற்றுக்காக சிஎம்ஒய்கே வெளிப்பாட்டுக்கு மாற்றுதலும் நிற மேலாண்மை என்பதில் உள்ளடங்கும். ஈரப்பதம் காற்றழுத்தமானி காட்டும் அழுத்தம் போன்ற சூழல் மாறுபாடுகளுக்கேற்ப செயற்படுவதும் உள்ளடங்கும்.

colour management system : நிற மேலாண்மை முறைமை : கோடாக் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். மற்ற மென்பொருள் விற்பனையாளர்கள் அதைப் பயன்படுத்த உரிமங்கள் வழங்கப்பட்டன. ஒளிக்காட்சித் திரை, கணினிக் காட்சித்திரை, மற்றும் அச்சு வடிவில் எதிலும் தோன்றும் வண்ணங்களுக்கு இணையானவற்றை உண்டாக்கவும் அளவீடு செய்யவும் பயன்படுவதற்கான தொழில் நுட்பமாகும்.

colour map : வண்ண அமைபடம் : சில குறிப்பிட்ட துண்மிகளைக் கொண்டு அதிக வேலை வாங்குவதற்காக, கணினி வரைபட முறையிலுள்ள ஒரு திட்டம்.

colour meter : வண்ண மதிப்பீட்டுச் சாதனம் : தரமான தொகுப்பு வண்ணங்களைக் குறிப்பிடும் முறையில் வண்ணங்களை மதிப்பிட்டு அடையாளம் காண உதவும் சாதனம்.

colour missing : வண்ண இழப்பு; நிறம் காணப்படாமை.

colour model : நிற மாதிரியம் : வரைகலைகளிலும், டி. டி. பி யிலும் நிறத்தைக் குறிப்பிடும் முறை. இதில் நிறங்கள் பான்டூன் (Pantone) முறையில் குறிப்பிடப்படுகின்றன. கணினியில் பலமுறைகளில் நிறங்களைக் குறிப்பிடலாம். RGB (சிகப்பு, பச்சை, நீலம்) CMY (சியான், மெஜந்தா, மஞ்சள்) மற்றும் HSB (Hue, Saturation, brightness) என்பன.

colour mode property : நிற பாங்குப் பண்பு.