பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colour monitor

276

colour scanner


colour monitor : வண்ணத் திரையகம் : நிறத்தில் வரைகலை உருவங்களையோ அல்லது சொற்களையோ அமைக்க தகவி அல்லது ஒளிக்காட்சி (Video) அட்டையும் சேர்ந்தியங்க வடிவமைக்கப்பட்ட கணினி திரைக் காட்சி. திரையில் உள் பக்கமாக மூன்று நிறக்கலவைகள் (சிகப்பு, பச்சை, நீலம்) உள்ளன. நிறக்கலவை எரியத்தை (பாஸ்பரை) ஒளியூட்டி நிறத்தை அளிப்பதற்கு மூன்று நிறங்களைக் கொண்ட மின்னணு பீச்சிகள் உள்ளன.

colour named literals : நிறப்பெயர் நிலையுரு; நிறப்பெயர் மதிப்புருக்கள்.

colour printer : வண்ண அச்சுப்பொறி : பல நிறங்களில் செய்தி, வரைபடங்கள், வரிப் படங்கள், கலைப் படைப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் வெளியீட்டுச் சாதனம்.

colour resolution : நிறத் தெளிவு : ஒரு கணினி அமைப்பு உரு வாக்கக்கூடிய பல்வகை நிறங்களின் எண்னிக்கை. இதன் மதிப்புகளை துண்மிகளில் கொடுப்பார்கள்.

நிற வருடுபொறி

colour saturation : நிற உச்சம் : ஒரு நிறத்தில் உள்ள ஒளியின் அளவு. மேலும் உச்சத்திற்குச் சென்றால், மேலும் அதிக நிறத்தைப் பெறலாம்.

colour scanner : நிற வருடுபொறி : உருவங்களை இலக்கமாக்கிய உருவமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக்கூடியது. வருடு பொறியின் துண்மி (bit) யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். துண்மியின் ஆழம் என்பது வண்ணத்தை 8, 16, 24 அல்லது 32 நுண்மிகளாக மாற்றும் ஆற்றலாகும். வெளிப்பாட்டை அச்