பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

command shell

283

commerce server


command shell : கட்டளைச் செயல்தளம்.

command state : கட்டளை நிலை : ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை.

command statement : கட்டளைக் கூற்று.

command tree : கட்டளை மரம் : தலைமைக் கட்டளைப் பட்டியலுக்கும் தொடர்புடைய துணைப் பட்டியல்களுக்கும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கூறும் ஒரு வரிசைமுறை நிரல் படம்.

comment out : விளக்கக் குறிப்பாக்கு : ஒரு நிரலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை தற்காலிகமாக விளக்கக் குறிப்புப் பகுதியில் அடைத்துச் செயல்பட இயலாமல் செய்தல்.

comments : குறிப்புரைகள் : கணினி நிரலில் உள்ள கணினி மொழி கட்டளைகளுக்கு இடையே ஆங்காங்கே சேர்க்கக் கூடிய ஆங்கில உரைநடை நிரலின் செயல்களை மனிதர்களுக்கு விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. கணினி விளக்க நூல்களில் சரியாக எழுதப்பட்ட குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. நிரலின் உள்ளேயே இவை அமைவதால் எதிர்காலத்தில் பயன்படுத்துவோர்களுக்கு நிரல்களைப் புரிந்து கொள்ளவும், மாற்றவும் மிகவும் உதவியாக இவை அமைகின்றன.

comment statements : குறிப்புரைக் கூற்றுகள்.

commerce server : வணிக வழங்கன்; வணிகப் சேவையகம் : நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்துவதறகாக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தரவுகளை மறைக்குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிற்கும் இடையில் தரவு மாற்றம் செய்யப்படுகிறது. அஞ்சல்வழி வணிகம் புரியும் கம்பெனிகளும் வணிக வழங்கன்களை பயன்படுத்துகின்றன. சேமிப்பகம் அல்லது கம்பெனி அளிக்கும் பண்டங்கள் அல்லது சேவைகள் ஒளிப்படங்களாக விளக்கப்பட்டு காட்சியாக சேமிப்பகம் அல்லது கம்பெனியின் வலைத் தளத்தில் காட்டப்படுகின்றன. பயனாளர்கள் நேரடியாகத் தங்கள் வலை உலாவியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைக் கேட்டுப்