பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

common control

285

Common Lisp


மொசைக்கின் எக்ஸ்-விண்டோஸ் மற்றும் விண்டோஸ் பதிப்புகள் டிசிபீ/ஐபீ நெறிமுறை மூலமாக பிற நிரல்களுடன் தரவு பரிமாறிக் கொள்கின்றன. விண்டோஸ் பதிப்பில் ஓஎல்இ தரவு பரிமாற்றமும் இயல்வதாகும்.

common control : பொதுக் கட்டுப்பாடு.

Common Dialog Box Control : பொது உரையாடல் பெட்டி இயக்குவிசை.

commondore international inc : கமாண்டோர் இன்டர்நேஷனல் இன்க் : வீட்டுப் பயன்பாட்டிற்காக நுண்கணினி அமைப்புகளை உற்பத்தி செய்வதில் சிறப்பிடம் பெற்ற நிறுவனம். கமாண்டோர் பெட்விக் மற்றும் கம்மோடோர் 64 ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கம்மோடோர் 128 மற்றும் அமிகா உள்ளிட்ட பெரிய நுண்கணினி அமைப்புகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

Common Hardware Reference Platform : பொது வன்பொருள் குறிப்புப் பணித்தளம் : பவர்பீசி செயலியின் அடிப்படையில் அமைந்த ஒரு கணினிக் குடும்பத்துக்கான வரையறுப்பு. மேக்ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் மற்றும் சோலாரிஸ் உட்பட பல்வேறு இயக்க முறைமைகளில் இக்கணினிகள் செயல்பட முடியும்.

Common Internet File System : பொது இணையக் கோப்பு முறைமை : சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப் நெட்வொர்க் என்னும் கோப்பு முறைமைக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வைத்த தர வரையறை. இணையம் மற்றும் அக இணையக் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கோப்பு முறைமை ஆகும்.

common language runtime (CLR) : பொதுமொழி இயக்கச் சூழல் : மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நெட் (NET) தொழில்நுட்பத்தின் ஓர் அங்கம். பல்வேறு மொழியில் எழுதப்பட்ட நிரல்களை ஒரே இயக்க சூழலில் செயல்படுத்த முடியும்.

common language specification (CLS) : பொதுமொழி வரையறை : பொது மொழி வரையறுப்பு. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நெட் (NET) தொழில் நுட்பத்தின் ஓர் அங்கம்.

Common Lisp : பொது லிஸ்ப் : லிஸ்ப் நிரலாக்க மொழியின்