பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

communication control unit

287

communications parameters


தொலைபேசிக் கம்பிகள் மற்றும் செயற்கைக் கோள் தரவு தொடர்புகள் ஆகியவை பயன்படுகின்றன.

communication control unit : தரவு தொடர்புக் கட்டுப்பாட்டுச் சாதனம் : பல்நோக்குக் கணினியிலிருந்தோ அல்லது கணினிக்கோ செய்தித் தரவு தொடர்பு ஓட்டத்தை மட்டும் கையாள வேண்டிய ஒரே வேலையைச் செய்கின்ற ஒரு சிறிய கணினி.

communication data : தரவு தொடர்பு தரவு.

communication device : தரவு தொடர்புச் சாதனம்.

communication interface : தரவு தொடர்பு இடைமுகம்.

communication line : தரவு தொடர்பு இணைப்பு : தொலை பேசிக் கம்பி இணையச்சு வடம், ஒளியிழை வடம் அல்லது நுண்ணலை இணைப்பு போன்று தரவுகளை அனுப்புவதற்கேற்ற இணைப்பு.

communication link : தரவு தொடர்புத் தொடுப்பு : கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றத்துக்கு வழியமைத்துத் தரும் இணைப்பு.

communications controller : தரவு தொடர்பு கட்டுப்படுத்தி : கணினியுடன் பல தரவு தொடர்புக் கம்பிகளை இணைக்கும் வெளிப்புறக் கட்டுப்பாட்டுச் சாதனம். அனுப்புதல், பெறுதல் மற்றும் செய்தி குறியாக்கம், குறிவிலக்கம் போன்ற நடவடிக்கைகளை இது செய்கிறது.

communications interrupt : தரவு தொடர்புக் குறுக்கீடு : நேரியல் தகவி மூலம் வரும் வன்பொருள் குறுக்கீடு. வரிசைக் கோட்டில் வேறொன்றை அனுப்பும்போது ஒரு எழுத்து குறுக்கே வருதல்.

communications link : தரவு தொடர்பு தொடுப்பு : இரண்டு கணினி சாதனங்களுக்கிடையில் தகவலை அனுப்பும் முறை.

communications network : தரவு தொடர்பு பிணையம் : முனையங்களையும் கணினிகளையும் இணைக்கும் தரவு தொடர்பு வழித் தடங்கள்.

communications parameters : தகவல் தொடர்பு அளபுருக்கள் : கணினிகள் தம்மிடையே தகவல் பரிமாறிக் கொள்ளத் தேவையான பல்வேறு தகவமைவுகளைக் குறிக்கும் அளபுருக்கள் ஒத்தியங்காத் தரவு தொடர்புகளில், எடுத்துக்காட்டாக, இரு இணக்கி (மோடம்) களுக்கிடையே தரவு தொடர்பு