பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

communications processor

288

communication satellite


நடைபெற மோடத்தின் வேகம், தரவு துண்மிகள், முடிப்புத் துண்மிகளின் எண்ணிக்கை, மற்றும் வகைச் சமன் ஆகிய அளபுருக்களை சரியாக தகவமைக்க வேண்டும்.

communications processor : தகவல் தொடர்புச் செயலகம் : கணினி அமைப்புக்கும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கும் இடையே தரவு பரிமாற்றலுக்கான பாதை அமைத்துத் தரும் கணினி.

communications programme : தகவல் தொடர்பு நிரல் : மோடெம் மூலமாக தகவல் தொடர்பு கொள்ள கணினிகளை அனுமதிக்கும் நிரல். தகவல் தொடர்பு கொள்வதற்கும், தகவலைப் பெறுவதற்கும் தானியங்கி முறைகளாகிய தானியங்கி பதில் அளித்தல், தானே டயல் செய்தல், வேறொரு கணினியை டயல் செய்தல் போன்றவற்றை சில தரவு தொடர்பு நிரல்கள் செய்யவில்லை. தொலைதூர கணினியில் ஆளில்லாமலே தொடர்பு கொள்ளவும் சில நிரல்கள் திறனுடையவை.

communications protocol : தகவல் தொடர்பு நெறிமுறைகள் : இரண்டு கணினி சாதனங்களுக்கிடையே நடைபெறும் தகவல் தொடர்பை நெறிபடுத்தும் விதிமுறைகள். தரவு இழப்பு, தரவு பிழை தவிர்கின்ற வழி முறைகளையும் கொண்டிருக்கும்.

communications server : தகவல் தொடர்பு வழங்கன் : குறும் பரப்புப் பிணையங்களை விரி பரப்புப் பிணைப்பு அல்லது தொலைத் தகவல் தொடர்பு பிணையங்களுடன் இணைக்கும் கருவி.

communications slot : தகவல் தொடர்புச் செருகுவாய் : மெக்கின்டோஷ் கணினியின் பல்வேறு மாதிரிகளில் பிணைய இடைமுக அட்டைகளைச் செருகுவதற்கென உள்ள விரிவாக்க செருகுவாய்.

communications software : தகவல் தொடர்பு மென்பொருள் : பயனாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப இணக்கியை (modem) கட்டுப்படுத்தும் மென்பொருள். பெரும்பாலும் இது போன்ற மென்பொருள் முனையக் கணினிகளை குறிப்பிட்ட வகையில் தகவமைத்தல், கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் போன்ற வசதிகளைக் கொண்டிருப்பதுண்டு.

communication satellite : தகவல் தொடர்பு செயற்கைக்கோள் : பூமியின் மேலே சுற்றுப்பாதை