பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compact disc interactive

290

compaction


குறுவட்டு

லேசர் கதிர் மற்றும் பிரதிபலிப்பு ஆடிகளின் உதவியுடன் இதிலுள்ள தரவு படிக்கப்படுகிறது. சுருக்கப் பெயர் சிடி (CD). சிலவேளைகளில் ஒளிவட்டு என்று அழைக்கப்படுவதுண்டு. 2. சிடி-ரோம், சிடி ரோம்/எக்ஸ்ஏ, சிடி-ஆர், சிடி-ஆர்டபிள்யூ, ஃபோட்டோசிடி, டிவிஐ என்று பல பெயர்களில், பல்வேறு வகையான தரவு வடிவங்கள் பதியப்பட்டுள்ள குறுவட்டுகள் கிடைக்கின்றன. பல்வேறு படிப்பு/எழுது வேகங்களில் மற்றும் கொள்ளளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.

compact disc interactive (CDI) : இடைப்பரிமாற்ற குறுவட்டு : ஊடாட்டம் குறுவட்டு.

compact disc player : குறுவட்டு இயக்கி : குறுவட்டில் பதியப்பட்டுள்ள தகவலைப் படிப்பதற்கான ஒரு சாதனம். வட்டின் உள்ளடக்கத்தைப் படிப்பதற்குரிய ஒளியியல் கருவிகளையும், படித்த தகவலை சரியான வகையில் வெளியீடு செய்வதற்குரிய மின்னணுச் சுற்றுகளையும் இச்சாதனம் கொண்டிருக்கும்.

compact disc read only memorry (CDROM) : படிக்கமட்டுமான தரவு பதியும் குறுவட்டு.

compact disc-recordable and erasable : குறுவட்டு-பதிதகு மற்றும் அழிதகு : பதிதகு குறுவட்டுகள் வெற்று வட்டுகளாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது தொடக்கத்தில் அவற்றில் தரவு எதுவும் பதியப்பட்டிருக்காது. இத்தகைய வெற்று வட்டுகளை வாங்கி அவற்றில் எழுதுவதற்கென உரிய சாதனங்கள் மூலம் தகவலைப் பதியலாம். அவ்வாறு ஒருமுறை பதியப் பட்ட தகவலை மீண்டும் அழித்து எழுத முடியாது. அழிதகு குறுவட்டுகளில் ஒரு முறை எழுதப்பட்ட தகவலை அழித்து விட்டு மீண்டும் புதிய தகவலை எழுத முடியும்.

compaction : நெருக்கம் : செமிப்பதற்கு இடம் தருவதற்காக தரவு கோப்புகளை இறுக்கும் முறை.