பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compact model

291

compatibility mode


compact model : கச்சித மாதிரியம் : இன்டெல் 80x86 செயலிக் குடும்பத்தில் பின்பற்றப்படும் ஒரு நினைவக மாதிரியம். இதில் நிரலாணைத் தொடர்களுக்கென 64 கேபி நினைவகம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் நிரலின் தரவுகளுக்கென 1 எம்பி வரை ஒதுக்கப்படுகிறது.

company sites : நிறுவனத் தளங்கள்.

comparative grammer knowledge : ஒப்பிலக்கண அறிவு.

comparative knowledge : ஒப்புமை அறிவு.

comparative sort : ஒப்பீட்டு வரிசையாக்கம் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவரங்களை ஒப்பிட்டு வரிசையாக்கும் முறை.

comparator : ஒப்பீட்டுப் பொறி : மாற்றப்பட்ட தரவுகளின் துல்லியத்தைச் சோதனை செய்ய இரண்டாவது முறையும் மாற்றம் செய்து இரண்டுக்குமிடையில் உள்ள வேறுபாட்டைக் குறிப்பிடும் சாதனம்.

compare : ஒப்பீடு : ஒன்றின் மதிப்பைச் சோதித்து சுழி (பூஜ்யம்) யுடனான அதன் உறவை முடிவு செய்தல் அல்லது இரண்டு பொருள்களை சோதித்தல். ஒப்பீட்டு அளவை முடிவு செய்யவோ அல்லது அடையாளம் காணும் நோக்கத்துடனோ இது செய்யப்படும்.

comparison : ஒப்பீடு : இரண்டு எண்களை அவற்றின் அடையாளத்துக்காக ஒப்பிடுதல் அல்லது இரண்டு எழுத்துகளை அவற்றின் அளவின் ஒப்புமைக்காக ஒப்பிடுதல் அல்லது அகர வரிசைப்படுத்துதல்.

comparison operators : ஒப்பீட்டுச் செயற்குறிகள்.

comparison tests : ஒப்பீட்டுச் சோதனைகள்.

compart : காம்பார்ட் : Computer Art என்பதன் குறும்பெயர்.

compatibility : ஒத்தியல்பு; தகவுடைமை ஏறபுடைமை : 1. ஒரு கணினிக்காக எழுதப்பட்ட நிரல், வேறு ஒரு மாறுபட்ட கணினியில் செயல்பட அனுமதிக்கும் சில கணினிகளின் தன்மை. 2. கணினியும், அச்சுப் பொறியும் போன்று பல்வேறு சாதனங்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்யும் திறன்.

compatibility mode : ஒத்தியல்புப் பங்கு : ஒரு கணினி முறைமைக் உருவாக்கிய மென்பொருளோ வன்பொருளோ இன்னொரு கணினி முறைமையிலிருந்து செயல்படும் தன்மை.