பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compatible

292

compile and go


பொதுவாக இம்முறை, இன்டெல் நுண்செயலிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்நிலை இயக்க முறைமைகளில் (ஒஎஸ்/2 மற்றும் விண்டோஸ் என்டி) எம்எஸ்-டாஸ் மென்பொருளை இயக்குதலைக் குறிக்கும். அல்லது சில யூனிக்ஸ் பணி நிலையங்கள் மற்றும் சில மெக்கின்டோஷ் கணினிகளில் எம்எஸ்-டாஸ் மென்பொருள் இயக்குவதைக் குறிப்பதுண்டு.

compatible : ஏற்புடைமை : இரண்டு சாதனங்கள் அல்லது அமைப்புகளுக்கிடையே சேர்ந்து பணியாற்றும் தன்மையைக் குறிப்பிடுகிறது. ஒரு அமைப்பின் பகுதி ஒன்று வேறொரு அமைப்பின் பருப்பொருள் மற்றும் செயல்படு தன்மைகளுடன் முழுமையாக ஏற்புடையதென்றால், எந்த மாற்றமும் செய்யாமல் அதை வேறொரு அமைப்புடன் சேர்த்துக் கொள்ளலாம்.

compatible software : ஒத்தியல்பு மென்பொருள் : எந்தவித மாற்றமும் செய்யாமல் பல்வகை கணினிகளில் செயல்படக்கூடிய நிரல்கள்.

compilation : தொகுத்தல்; மொழி மாற்றல் : கணினிச் செயலகத்தில் நேரடியாக இயக்கப்படுவதற்காக உயர்நிலை மொழிகளில் எழுதப்பட்ட நிரல்களை எந்திர மொழி ஆணைகளாக மொழி பெயர்த்துத் தரும் இரு முக்கிய முறைகளில் ஒன்று. இயக்கத்திற்கு முன்பே முழு நிரல் மொழி பெயர்க்கப்பட வேண்டும். ஆணை மாற்றி (interpretation) -க்கு மாறானது. ஆனைமாற்றி முறையில் ஒவ்வொரு ஆணையும் அது செயல் படுத்தப்படும்போது மட்டுமே மாற்றப்படுகிறது.

compilation process : மொழி மாற்றுச் செயல்முறை.

compilation software : தொகுப்பு; மென்பொருள் : மொழிமாற்றி மென்பொருள்.

compilation time : மொழி மாற்று நேரம் : மூலமொழி நிரலை இலக்கு நிரலாக மொழிபெயர்க்கும் (தொகுக்கும்) நேரம்.

compile : மொழிமாற்று : ஃபோர்ட்ரான், கோபால், அல்லது பாஸ்கல் போன்ற உயர் நிலை நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட நிரலை எந்திர மொழி நிரலாக மாற்றி அமைத்தல்.

compile and go : மொழிமாற்றி இயக்க : ஒரு நிரலை எந்திர மொழிக்கு மாற்றி அதனை இயக்கும் பணியையும் ஒரே நேரத்தில் செய்தல்.