பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compiled basic

293

compile time binding


compiled basic : மொழிமாற்று பேசிக் : பொதுவாக பேசிக் மொழி ஒவ்வொரு ஆணையாக நிறைவேற்றக்கூடிய ஆணை மாற்றி (interpreter) யை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறில்லாமல், முழு நிரலையும் பொறிமொழியாக்கி இயக்கும் மொழிமாற்றியை (compiler) அடிப்படையாகக் கொண்ட பேசிக் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இவ்வாறு மொழி மாற்றப்பட்ட பேசிக் நிரல் மிகவேகமாக இயங்கும் என்பதால் தொழில் முறையான நிரல்களுக்கு இத்தகு பேசிக் மொழியையே தேர்வு செய்வர்.

compiled language : மாற்றிய‌ மொழி; தொகு மொழி : கணினியில் இயக்கப்படுவதற்கு முன் பொறிக் குறி முறையாக்கப்பட்ட ஒரு மொழி ஒவ்வொரு ஆணையாக மொழி பெயர்க்கப் பட்டு இயக்கப்படும் ஆணை மாற்று முறையிலிருந்து வேறு பட்டது.

compiled programme : தொகுக்கப்பட்ட நிரல்; மொழி மாற்றிய நிரல்.

compiler : மொழிமாற்றி; தொகுப்பி : உயர் நிலை மொழி நிரலை, கணினி வன்பொருளில் நேரடியாக செயல்படுத்தும் நோக்கத்துடன், மொழி பெயர்க்கும் மென்பொருள், இயக்கப்படுவதற்கு முன்பே முழு நிரலையும் மொழி பெயர்க்கிறது.

compiler language : மொழி மாற்றியின் மொழி : உயர்நிலை மொழிச் சொற்றொடர்களை இலக்கு மொழிக்கு மொழி பெயர்த்துத் தருவதற்கு பயன்படுத்தும் மொழிமாற்றி உருவாக்கப்பட்ட மொழி.

compiler programme : மொழி மாற்று நிரல்.

compile time : மொழிமாற்று நேரம் : ஒரு நிரலை மொழி மாற்ற ஆகும் நேரம். மூல மொழியிலிருந்து எந்திர மொழிக்கு மொழி பெயர்க்க ஆகும் நேரம். நூலக செயல்களுடன் தொடுக்கும் நேரமும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும்.

compile time binding : தொகு நேர பிணைப்பு; மொழிமாற்று நேரப் பிணைப்பு : ஒரு நிரல் மொழி மாற்றப்படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சில வகை நிரல்களில் இப்பொறுப்பு, நிரல் இயக்கப்படும் போது முடிவு செய்யப்படுவதுண்டு.